பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழு கூட்டம் இன்று முற்­பகல் 11மணிக்கு பாரா­ளு­மன்­றத்தில் உள்ள எதிர்க்­கட்­சித் ­த­லைவர் அலு­வ­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. 

தேசிய அர­சாங்­கத்தின் மூன்­றா­வது வரவு செல­வுத்­ திட்டம் இன்று சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் குறித்த வரவு – செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தா இல்­லையா  என்­பது குறித்து இறுதி முடிவு இன்­றைய தினம் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கூட்­ட­மைப்பின் உயர்­மட்­ட ­த­க­வல்கள் தெரி­விக்­கின்­றன.

மேலும் ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் செய­லா­ளரும், வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ­சக்தி ஆனந்தன் தனக்கு  இந்த கூட்­டத்தில் பங்­கெ­டுப்­ப­தற்­கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தாகவும் அவர் அதில் கலந்து கொள்வதா கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே­வேளை கடந்த 2016, 2017 ஆகிய ஆண்­டு­க­ளை ­போன்று இம்­மு­றை யும் வரவு – செல­வுத் ­திட்­டத்­திற்கு ஆத­ர­வ ­ளிக்க வேண்டும் என்று சில உறுப்­பினர்­களின் நிலைப்­பாடு காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நிலையில் அர­சாங்­கத்­திற்கு மூன்­றி­லி­ரண்டு பாரா­ளு­மன்ற பெரும்­பான்மை பலத்­தினை வெளிப்­ப­டுத்த வேண்டும் என்ற அடிப்­ப­டையில் ஆத­ர­வ­ளித்­தே­யாக வேண்டும் என்ற நிலைப்­பாடே உள்­ளது. 

அதே­நேரம் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்­டத்­திற்கு நேர­டி­யாக ஆத­ர­வளிப்­ப­தில்­லை­யென்றும், மக்­களின் போராட்­டங்­க­ளுக்­கான தீர்­வுகள் வழங்­கப்­ப­டா­தி­ருக்­கின்ற நிலையில் அதற்­கு­ரிய சில நிபந்­த­னை­களை விதித்து வரவு – செல­வுத்­ திட்­டத்­திற்­கான ஆத­ரவு அளிப்­பது குறித்த முடி­வொன்றை எடுக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிலும் சில உறுப்­பி­னர்கள் உள்­ளனர்.

இத்­தகை பின்­ன­ணியில் நடை­பெ­ற ­வுள்ள பாரா­ளு­மன்ற குழு கூட்­டத்தில் 2018ஆம் ஆண்டு வரவு – செல­வுத் திட் டத்துக்கு நிபந்­த­னை­யற்ற ஆதரவளிப்பது குறித்து ஏற்கனவே தலைமையுடன் சில உறுப்பினர்கள் கலந்துரையாடிய விட யங்கள் தொடர் பாகவும் அதிக கவ னம் செலுத்தப்பட்டு தீர்க்கமான முடி வொன்று எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.