நல்லாட்சியின் மூன்றாவது பட்ஜட் இன்று

Published By: Digital Desk 7

09 Nov, 2017 | 10:15 AM
image

தேசிய அர­சாங்­கத்தின்  2018ஆம் ஆண்­டுக்­கான வரவு–செல­வுத்­திட்டம் இன்று  இரண்­டா­வது வாசிப்­புக்­காக பாரா­ளு­மன்­றத்தில் நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீரவால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

பாரா­ளு­மன்றம் இன்று  பிற்­பகல் 3 மணிக்கு கூட­வி­ருப்­ப­துடன், அமைச்சர் மங்­கள சம­ர­வீர வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தை சபையில் இரண்­டா­வது வாசிப்­பிற்­காக சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

தேசிய அர­சாங்­கத்தில் நிதி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட பின்னர் மங்­கள சம­ர­வீர சமர்ப்­பிக்­க­வுள்ள முத­லா­வது வர­வு­செ­ல­வுத்­திட்டம் இதுவாகும். 

வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தை சமர்ப்­பித்து அமைச்சர் மங்­கள சம­ர­வீர உரை­யாற்­ற­வுள்­ள­தோடு  நாளை வெள்­ளிக்­கி­ழமை முதல் வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்; ஆரம்­ப­மாகும். இந்த இரண்­டா­வது வாசிப்பு மீதான விவாதம் எதிர்­வரும் 16ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது.

இரண்­டா­வது வாசிப்பு மீதான வாக்­கெ­டுப்பு  16ஆம் திகதி மாலை  நடத்­தப்­ப­ட­வுள்­ள­தோடு இம்­மாதம் 17ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரை குழு­நிலை விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. 

இத­னை­ய­டுத்து டிசம்பர் 9ஆம் திகதி மாலை மூன்­றா­வது வாசிப்பு மீதான விவா­தத்தின் இறு­தியில் வாக்­கெ­டுப்பு நடை­பெ­ற­வுள்­ளது. இதே­வேளை வர­வு­செ­ல­வுத்­திட்டம் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வதை முன்­னிட்டு பாரா­ளு­மன்­றத்தில் விசேட பாது­காப்பு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விசேட விருந்­தி­னர்­களை அழைத்து வரு­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ள­தோடு அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு மட்­டுமே பார்­வை­யாளர் கல­ரியில் பிர­வே­சிப்­ப­தற்­கான அனு­மதி வழங்­கப்­படும் எனவும் சபா­ந­யகர் கரு ஜெய­சூ­ரிய அறி­வித்­துள்ளார். 

இதே­வேளை இலங்கை வர­லாற்றில் முதற் தட­வை­யாக வர­வு­செ­ல­வுத்­திட்டம் முன்­வைக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் பல அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ள நிலையில் மேலும் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளின் வரியைக் குறைக்கபடுவது உள்ளிட்ட நன்மைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19