ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய நெவஸ்கா லேடி என்ற கப்பல் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தது.

இந்நிலையில், குறித்த கப்பலில் தருவிக்கப்பட்டுள்ள எரிபொருளின் மாதிரி, ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், கப்பலில் இருந்து எரிபொருளை வெளியேற்றும் நடவடிக்கைகள் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கும் என்று, கனியவள அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று பிற்பகலுக்குப் பின்னர் எரிபொருளை நாடெங்கிலும் விநியோகிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் இன்று விநியோகிக்கப்படவுள்ள நிலையில், பெற்றோலுக்கான தட்டுப்பாட்டு நிலையில், குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.