சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக, அரச மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்களது பெற்றோர் சங்கம் நடத்திய சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சைட்டம் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்திருந்த தீர்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்றும், உரிய தீர்வை அரசாங்கம் அறிவிக்கும் வரையிலும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று (8) மாலை அச்சங்கத்தைச் சேர்ந்த பெற்றோர் ஐந்து பேர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

எனினும், பிரதியமைச்சர் டொக்டர் ஹர்ஷ டி சில்வாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.