அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மியாமி பாடசாலையொன்று அதன் மாணவர்களுக்கு குண்டு துளைக்காத பாடசாலைப் பைகளை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.

‘ஃப்ளோரிடா கிறிஸ்டியன் ஸ்கூல்’ என்ற அந்தப் பாடசாலையின் மாணவர் பொறுப்பு அதிகாரியும், தலைமைப் பாதுகாப்பு அதிகாரியுமான ஜோர்ஜ் குல்லா என்பவர், “பாடசாலை மாணவர்களிடையேயும் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவி வருகிறது. எமது பாடசாலையில் திடீரென துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஏதும் இடம்பெற்றால், மாணவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் முகமாகவே இந்த விசேட குண்டு துளைக்காத பாடசாலைப் பைகளை விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஏதும் இடம்பெற்றால், அதன்போது இந்த விசேட பைகளைப் பயன்படுத்தி எவ்வாறு தம்மைக் காத்துக்கொள்வது என்பதை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு விளக்கும் நடைமுறையும் இப்பாடசாலையில் ஆரம்பமாகியுள்ளது.