அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வாகன தொடரணி சென்றுகொண்டிருந்த போது அதனை நோக்கி ஆபாச சைகை காட்டிய பெண் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேற்கத்தைய கலாச்சாரத்தில் நடுவிரலை தூக்கி காட்டுதல் என்பது அவமானத்தின் சின்னமாக கருதப்படுகின்றது. ஒருவரை அவமானப்படுத்த விரும்பினால்  உடனே ஏதாவது ஒரு கெட்டவார்த்தையுடன் நடுவிரலை தூக்கி காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கே நடுவிரலை தூக்கி காட்டியுள்ளார் ஒரு பெண்.

கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் திகதி டிரம்பின் கோல்ஃப் மைதானத்திற்கு அருகில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் போதே  ஜூலி பிரிஸ்க்மேன் நடுவிரலை தூக்கி காட்டியுள்ளார். அதை புகைப்படமாகவும் எடுக்கவும் செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தை தனது வலைதளத்தில் பகிர்ந்த பிறகு, குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது. இதனால்  ஜூலி பணிபுரியும் நிறுவனமான அகிமா எல்.எல்.சியால் ஜூலியை பணிநீக்கம் செய்துள்ளது.

ஆனால் அந்த புகைப்படம் எடுக்கப்படும்போது தான் அலுவலக வேலைநேரத்தில் இல்லை என்றும், பதிவுகளில் நிறுவனத்தின் பெயரை குறிப்பிடவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார் ஜூலி பிரிஸ்க்மேன்.

அத்துடன் தனது தனிப்பட்ட செய்கைக்காக பதவியில் இருந்து ஏன் விலக வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

50 வயதாகும் ஜூலி ஆறு மாத அரசு ஒப்பந்தபணியாக குறித்த நிறுவனத்தில் தகவல்தொடர்பு பிரிவில் பணியாற்றியுள்ளார்.

அந்த சைகையை பலமுறை செய்ததோடு அதிபரின் வாகனத்திற்கு இணையாக சைக்கிளை ஓட்ட முயன்ற ஜூலியின் பிடிவாதம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.