இலங்­கையில் வளர்ச்சி கண்டு வரு­கின்ற ஸ்மார்ட்போன் வர்த்­த­க­நா­மங்­களின் மத்­தியில் முத­லிடம் வகிக்கும் Huawei, அனை­வரும் மிகவும் ஆவ­லுடன் எதிர்­பார்த்­தி­ருந்த Huawei nova 2i என்ற மத்­திய உயர் ரக ஸ்மார்ட்­போனை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

Huawei இன் வியக்­க­வைக்கும் அதி­ந­வீன கமெரா தொழில்­நுட்­ப­மா­னது முதலில் படத்தை வசப்­ப­டுத்தி, அதன் பின்­னரே அதன் விளைவில் கவனம் செலுத்­து­வதால், சிறந்த அமைப்பு மற்றும் நினை­வு­களின் பலனைத் தரு­கின்­றது.

இச்­சா­த­னத்தில் முதன்­மு­றை­யாக quad கமெ­ராக்கள், 13MP முன்­புறம் நோக்­கிய இரட்டைக் கமெ­ராக்கள் மற்றும் smart ambient flash தொழில்­நுட்பம், 16MP உட­னான 2MP பின்­புற இரட்டை கமெ­ராக்கள் வசப்­ப­டுத்தும் படங்கள் மற்றும் வீடி­யோக்­களின் உயி­ரோட்­டத்தை மேம்­ப­டுத்­து­கின்­றன. Huawei nova 2i இன் முன்­னோக்­கிய இரட்டைக் கமெ­ரா­வா­னது வியக்­க­வைக்கும் வில்­லைகள் மற்றும் அதி­ந­வீன கமெரா தொழில்­நுட்பம் ஆகி­ய­வற்றின் வலு­வினை உப­யோ­கித்து, சிறப்­பான ஒளி­யூட்டல் மற்றும் பிர­கா­ச­மான விம்­பங்­க­ளுடன் மகத்­தானbokeh விளைவைத் தரு­கின்­றன.   

படைப்பின் கலை­ந­யத்தை வெளிக்­கொ­ணரும் வகையில் Huawei nova 2i ஆனது விளிம்பு கோடுகள், வடிவம் மற்றும் ஒளி பிர­தி­ப­லிப்பு ஆகி­ய­வற்றின் வடி­வி­யலை தத்­ரூ­ப­மாக கொண்­டுள்­ளது. வளைந்த விளிம்­புகள் மூல­மாகக் கிடைக்கும் மென்மை, நேர்த்தி மற்றும் தனித்­து­வ­மான உணர்வை இந்த Huawei nova 2i முழு­மை­யாக உப­யோ­கிக்­கின்­றது.

 வட்ட முனை­களைக் கொண்ட 5.9 அங்­குல தவா­ளிப்பு இன்­றிய முகத்­தி­ரை­யா­னது சாந்­த­மான தோற்றம் மற்றும் மென்­மை­யுடன் சௌக­ரி­ய­மாக கையில் பற்றிப் பிடித்­தி­ருக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. தவா­ளிப்பு இன்­றிய சாத­ன­மா­னது கவர்ச்­சி­யான, முழு­மை­யான உயர் பிரி­திறன் கொண்ட முகத்­தி­ரையை ஒருங்­கி­ணைப்­ப­துடன், சமூக ஊடகம், வீடியோ பார்த்தல், புத்­தகம் வாசித்தல், விளை­யாட்­டுக்கள் மற்றும் இணை­யத்தில் உலா­வுதல் போன்­ற­வற்­றிற்கு வலி­மை­யான பரி­மா­ணத்தைச் சேர்ப்­பிக்­கின்­றது.     

மத்­திய அச்­சினைச் சுற்றி, சமச்சீர் அழ­குடன் தனித்­து­வ­மான வகையில் Huawei nova 2i வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இத்­தொ­லை­பேசி சாத­னத்தின் பளிச்­சென்ற வெளிச்சம், இரட்டை கமெ­ராக்கள், விரல் அடை­யாள சென்சார் ஆகி­யன இந்த அச்­சினைச் சூழ சமச்சீர் வடிவில் சீர­மைக்­கப்­பட்­டுள்­ளது.

 தொலை­பேசி சாத­னத்தின் பின்­ப­கு­தியை சமச்­சீ­ராகப் பேணும் வகையில் அதனை வடி­வ­மைப்­பது மிகவும் கடி­ன­மான ஒரு சவா­லாக இருப்­பினும், அதனை இன்னும் அதி­க­மான அளவில் கவரும் அழகைக் கொண்­ட­தாக மாற்­றி­ய­மைக்க முயற்­சிப்­பது உண்­மையில் நற்­ப­லனைத் தரு­கின்­றது.

 முன்­பு­றத்தில் வலது பக்­கத்­தில் இரண்டு கமெ­ராக்கள் உள்­ள­துடன், இட­து­பு­றத்தில் மென்­மை­யான வெளிச்சம் கொண்ட சென்சார் உள்­ளமை தொலை­பேசி சாதனத்தின் வடி­வ­மைப்­பா­னது சீர்­கொண்­ட­தா­கவும், தோற்­றத்தில் அடக்­க­மா­ன­தா­கவும் திகழும் வகையில் அதனை மாற்­றி­ய­மைத்­துள்­ளது.