லா லிகா தொடரில் கடைசி 3 போட்­டி­களில் கோல் அடிக்க முடி­யாத ரொனால்டோ மன­மு­டைந்­துள்ளார் என்று ரியல் மட்ரிட் அணித் தலைவர் செர்­ஜியோ ரமோஸ் கூறி­யுள்ளார்.

போர்த்­துக்கல் கால்­பந்து அணியின் தலை­வ­ரான கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ உலகின் தலை­சி­றந்த கால்­பந்து வீர­ராக திகழ்­கிறார். 

கடந்த பரு­வத்தில் ரியல் மட்ரிட் அணி லா லிகா மற்றும் ஐரோப்­பிய சம்­பியன் லீக் தொடரை வெல்ல முக்­கிய கார­ண­மாக இவர் இருந்தார்.

தற்­போது 2017/-18 லா லிகா பரு­வ­காலம் நடை­பெற்று வரு­கி­றது. ரியல் மட்ரிட் 11 ஆட்­டங்கள் முடிவில் 3ஆ-வது இடத்­தையே பிடித்­துள்­ளது. 

இந்த தொடர்  கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோ­விற்கு சிறந்­த­தாக அமை­ய­வில்லை. கடைசி மூன்று போட்­டி­களில் இவர் கோல்­களே அடிக்­க­வில்லை. 

இது­கு­றித்து ரமோஸ் கூறு­கையில்,

ரொனால்டோ மற்றும் கரிம் பென்­சி­மாவின் கோல்கள் விரைவில் வரும்.  பென்­சிமா இதை­யெல்லாம் பெரி­தாக எடுத்துக் கொள்­ள­மாட்டார். ஆனால் ரொனால்டோ கோல் அடிக்­கா­விடில் மிகவும் மன­மு­டைந்து போவார். ஆனால் இவர்கள் கோல்கள் அடிக்­கா­தது பற்றி நாங்கள் கவலையடையவில்லை என்று ரொனால்டோவை தேற்றியுள்ளார் ரமோஸ்.