X30 ஆசியக் கிண்ண கோகார்ட் மோட்டார் பந்­தயத் தொடர் முதன்­மு­றை­யாக இலங்­கையில் எதிர்­வரும் 2018ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்­ளது. இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள முத­லா­வது சர்­வ­தேச கோகார்ட் போட்டித் தொட­ரான x30 பண்­டா­ர­க­மவில் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 13ஆம் மற்றும் 14ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளது.

தென் கிழக்­கா­சி­யா­வுக்கு வெளியில் ஆசி­யாவில் x30 போட்டித் தொடர் ஒன்று நடை­பெ­ற­வுள்­ளமை இதுவே முதன்முறை­யாகும். டேவிட் பீரிஸ் ரேஸிங் அண்ட் லெஷர் நிறு­வனம் இப்­போட்­டி­களை நடத்­து­கின்­றது.

X30 ஆசியக் கிண்ணம் 2018 ஆனது ஆசி­யாவில் கோ கார்ட்டிங் பரு­வத்தை ஆரம்­பித்து வைக்­கவும், சிங்­கப்பூர் மற்றும் மலே­ஷியா ஆகிய நாடு­களில் 6 சுற்­று­க­ளாக நடை­பெற்ற போட்டி­களின் தொடர்ச்­சி­யா­கவும் நடை­பெ­ற­வுள்­ளது.

ஆசி­யா மற்றும் ஐரோப்­பாவைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வலய மற்றும் சர்­வதேச கார்ட்டிங் வீரர்கள் இந்த சர்­வ­தேச நிகழ்வில் பங்­கு­பற்­ற­வுள்­ளனர். 

X30 போட்­டிகள் உல­க­ளா­வி­ய கார்ட்டிங் எஞ்சின் உற்­பத்தி மற்றும் கார்ட்டிங் போட்­டி­களை ஊக்­கு­விக்கும் ஒரு நிறு­வ­ன­மான IAME நிறு­வ­னத்­தினால் ஆரம்­ப­மாக்­கப்­பட்டு தற்­போது 25 இற்கும் மேற்­பட்ட நாடு­களில் நடை­பெற்­று­ வ­ரு­கி­றது.

8 வயதுப் பிரி­வு­க­ளி­லி ருந்து ஆரம்­பிக்­கப்­படும் இந்தப் போட்­டி­களில் 6 வகை யான எஞ்சின் மாதிரிகளைக் கொண்டு 2 சர்வதேச போட்டிகளும், பல்வேறு கண்டங்களுக்கான போட்டிகளும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.