குசல் மெண்­டிஸை ஒரேயடி­யாக இழக்க விரும்­ப­வில்லை. அத­னால் தான் தற்­கா­லி­க­மாக இழந்­து­விடும் முடி­வுக்கு வந்தோம் என்று இலங்கைக் கிரிக்கெட் அணியின் தெரி­வுக்­குழுத் தலைவர் லெப்ரோய் தெரி­வித்­துள்ளார். 

குசல் மெண்­டிஸை பாதா­ளத்­துக்குத் தள்­ளவோ அல்­லது இந்­தி­யா­வுக்கு அழைத்துச் சென்று ஆச­னத்தில் அமர வைக்­கவோ எமக்கு விருப்பம் இல்லை. 

உண்­மையில் அவரை சில உள்­நாட்டு போட்­டி­களில் விளை­யாட வைத்து, தொழில்­நுட்ப ரீதி­யி­லான துடுப்­பாட்­டத்தை அவர் மேலும் வளர்த்துக் கொண்டு, தனது பாணியில் ஆடி மீண்டும் மன உறு­தியை பெறச் செய்­யவே நாம் முயன்று வரு­கிறோம் என்று கிரிக்கெட் செய்தி இணைத்­தளம் ஒன்றுக்கு அவர் தெரி­வித்­துள்ளார். 

இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட­ருக்­கான இலங்கை அணி இன்று இந்­தி­யா­வுக்கு புறப்­பட்டுச் செல்­ல­வுள்­ளது.

இந்த அணியில் இளம் வீரர் குசல் மெண்டிஸ் இணைத்துக் கொள்­ளப்­பட வில்லை. குசலை இணைத்துக் கொள்­ளா­ததால் தெரிவுக்குழு கடும் விமர்­ச­னத்­திற்கு உள்­ளா­னது.

மஹேல ஜய­வர்­தன உட்­பட பல மூத்த வீரர்­களும் அதற்கு கண்­டனம் தெரி­வித்­தனர். இதற்கு பதி­ல­ளிக்கும் வகையில் தெரி­வுக்­குழுத் தலைவர் லெப்ரோய் தெரி­விக்­கையில்,

அவர் ஒரு நம்­பிக்கை கொண்ட வீரர். அவரைப் பொறுத்­த­வரை நம்­பிக்கை தான் அனைத்­துமே. அவரை மேலும் போட்­டி­களில் ஆட­வைத்து மென்­மேலும் குறைந்த ஓட்­டங்களைப் பெற்று அதன் பின் அவர் நீக்­கப்­பட்டு அவ­ரது நம்­பிக்­கையை மேலும் சித­றி­டிக்கும் நிலையை உரு­வாக்க நாம் விரும்­ப­வில்லை. 

போது­மான வயது இருக்­கும்­போது தம்மை கிரிக்­கெட்டில் சிறந்­த­தொரு வீர­ராக வரு­வ­தற்கு அவரை தொடர்ந்து பய­ணிக்க செய்­யவே நாம் விரும்­பு­கிறோம். அவர் மேலும் 10 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் லெப்ரோய் குறிப் பிட்டுள்ளார்.