கல்முனையை நான்காக பிரிக்க வேண்டுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் பேசவேண்டும்

Published By: Digital Desk 7

08 Nov, 2017 | 02:03 PM
image

கல்­மு­னையை நான்­காக பிரிக்­க­வேண்­டு­மானால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பேச வேண்டும். அவர்­களின் இணக்­கத்­துட­னேயே அது தொடர்­பி­லான நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்க முடியும் எனக் குறிப்­பிட்ட அமைச்சர் பைஸர் முஸ்­தபா, சாய்ந்­த­ம­ருது விட­யத்­தினை முன்­னெ­டுக்க முடி­யா­மைக்கு முஸ்லிம் கட்­சி­க­ளி­டையே காணப்­படும் ஒற்­று­மை­யீ­னமே காரணம் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று உள்­ளூ­ராட்சி அதி­கா­ர­ச­பைகள் விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்தின் மீதான விவா­தத்தில் பதி­ல­ளித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், முல்­லை­த்தீவு மாவட்­டத்தில் புதுக்­கு­டி­யி­ருப்பு, கரைது­றைப்பற்று பிர­தேச சபை­க­ளுக்­கான தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்மூலம் தமிழ் மக்­க­ளுக்­கான ஜன­நா­யக உரிமை கிடைத்­துள்­ளது என்று கூறு­வதில் மகி­ழ்ச்­சி­ய­டை­கின்றேன். 

தற்­போது சாய்ந்­த­ம­ரு­தினை பிர­தேச சபை­யாக தர­மு­யர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. அதற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் வாக்­கு­று­தி­யினை வழங்­கி­யி­ருந்தார். இருப்­பினும் பிர­தான முஸ்லிம் கட்­சி­க­ளி­டையே காணப்­படும் ஒற்­று­மை­யின்­மையே அந்த முயற்சி தோல்­வி­யடையக் கார­ண­மா­கி­யுள்­ளது. 

அதனைக் காரணம்காட்டி என்­மீது குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­றார்கள். அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. நான் எந்­த­வி­த­மான மறுப்­பி­னையும் சாய்ந்­த­ம­ருது விட­யத்தில் மேற்­கொள்­ள­வில்லை. 

கல்­முனை மாநக­ரத்­தினை நான்கு பிரி­வு­க­ளாக மாற்­று­வது குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­த­வேண்டும். அதற்கு அவர்­களின் இணக்­கப்­பாடும் அவ­சி­ய­மா­கின்­றது. இதனைப் புரிந்து கொள்­வது மிகவும் அவ­சி­ய­மா­னது.

இதே­வேளை அம்­ப­க­முவ பிர­தேச விட­யத்தில் மலை­யக தமிழ்க் கட்­சி­க­ளி­டையே ஒற்­றுமை காணப்­பட்­டது. அமைச்­சர்­க­ளான மனோ ­க­ணேசன், திகாம்­பரம் மற்றும்  ஆறு­முகன் தொண்­டமான் ஆகியோர் என்னை நேரில் வந்து சந்­தித்­தனர். கோரிக்­கைகளை முன்­வைத்து அதனை செயற்­ப­டுத்தி வெற்­றி­கண்­டுள்­ளனர்.

இதே­நேரம் தேர்­தலை நடத்­து­வ­தற்கு நான் தடை­யாக உள்­ள­தாக இங்கு குற்றம் சாட்­டப்­பட்­டது. உண்­மை­யி­லேயே நவம்பர் இரண்டாம் திக­தியே வர்த்­த­மானி அறி­விப்­புக்­கான கையொப்பத்தினை செய்து விட்டேன். அது அரச அச்சகத்திற்கும் அனுப்பப்பட்டுவிட்டது. எனது பணிகள் நிறைவடைந்து விட்டன. ஆகவே விரல் நீட்டுவதற்கு முன்னதாக நிலைமைகளை புரிந்துகொள்ள வேண்டும். குற்றம் சாட்டுவதை விடவும் செயற்பாடுகளை முன்னெடுப்பது கடினமானது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50