நாட்டில் இன்று ஏற்­பட்­டுள்ள எரி­பொருள் நெருக்­க­டிக்கு, பொது எதி­ர­ணி­யினர், இந்­தி­யாவை குறை கூறு­வது தும்பை விட்டு வாலை பிடிப்­பது போன்­ற­தாகும். இதை­விட பொது எதி­ரணி தலைவர், தன் வழ­மை­யான திருப்­பதி யாத்­தி­ரையின் போது இது­பற்றி இந்­திய கட­வு­ளிடம் முறை­யீடு செய்­யலாம். 

எரிபொருள் உண்­மையில், எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும், 21 நாட்­க­ளுக்கு தேவை­யான எரி­பொ­ருளை எப்­போதும் சேமித்து வைத்­தி­ருக்கும் வழ­மையை இம்­முறை கடை­ப்பி­டிக்க தவ­றி­ய­மையே, இன்­றைய சிக்­க­லுக்கு பிர­தான கார­ண­மாக அமைந்­துள்­ளது. 

நாட்டின் அதி­க­மான தனியார், பொது வாக­னங்கள் மற்றும் முச்­சக்­கர வண்­டிகள் ஓடும் கொழும்பு மாவட்டத்தின் பிரதிநிதி என்ற முறையில் இது தொடர்பில் தொல்­லை­களை சந்­தித்­துள்ள மக்­க­ளிடம் என் வருத்­தங்­களை தெரி­வித்­துக்­கொள்­கிறேன். என ஜன­நா­யக மக்கள் முன்­னணி தலைவர், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறி­யுள்ளார். 

இது தொடர்பில் அமைச்சர் மனோ மேலும் கூறி­ய­தா­வது, 

இந்­நாட்டில் இன்று எது நடந்­தாலும் அதற்கு இந்­தி­யாவை தேடி குறை கூறு­வது பொது எதி­ர­ணிக்கு பழகி விட்­டது. எரி­பொருள் கையி­ருப்பு தொடர்பில் வாராந்த அறிக்கை சமர்­ப்பிக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும், 21 நாட்­க­ளுக்கு தேவை­யான எரி­பொ­ருளை எப்­போதும் சேமித்து வைத்­தி­ருக்கும் வழ­ மையை கடைப்­பி­டித்­த­தா­கவும் தெரி­ய­வில்லை. 

இந்­தி­யாவில் இருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட கப்­பலில் தர­மற்ற எரி­பொருள் இருந்த கார­ணத்தால் அது நிரா­க­ரிக்­கப்­பட்­டது. உண்­மையில், இந்­திய எரி­பொருள் மாபியா இலங்­கைக்குள் வியா­பித்து இருக்­கின்­றது என்றால், அது நிரா­க­ரிக்­கப்­பட்டு இருக்­காது. 

இது­போன்று கடந்த காலங்­களில் பல்­வேறு நாடு­களில் இருந்தும் கொண்டு வரப்­படும் எரி­பொ­ருள்­களும் பல சந்­தர்ப்­பங்­களில் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. 

அப்­போ­தெல்லாம், உட­னடி தேவைக்கு இந்­தி­யாவில் இருந்தே அவ­ச­ர­மாக எரி­பொருள் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­டது. இலங்­கையில் எரி­பொருள் இறக்க முன் நடை­பெறும் பரி­சோ­த­னைகள் மூலம், இம்­முறை இந்­தி­யாவில் இருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட  தர­மற்ற எரி­பொருள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால்,  இத்­த­கைய சந்­தர்ப்­பங்­களை சமா­ளிக்க, 21 நாட்­க­ளுக்கு தேவை­யான எரி­பொ­ருளை எப்­போதும் சேமித்து வைத்­தி­ருக்கும் வழமை இம்­முறை கடை­ப்பி­டிக்க முடி­யாமல் போனதால் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது. 

இது தொடர்பில், இலங்­கையில் எரி­பொருள் விநி­யோ­கத்தில் ஈடு­பட்­டுள்ள இந்­திய நிறு­வ­னத்தை குறை கூறு­வதும் பிழை­யா­ன­தாகும். இந்த நிறு­வனம் இலங்கை எரி­பொருள் விநி­யோ­கத்தில் 14 வீதத்தை கையாள்கிறது.  இந்த விவகாரம் பற்றி ஆராய, ஜனாதிபதி விசேட அமைச்சரவை குழு ஒன்றை நியமித்துள்ளார். 

இந்த குழு நிலைமையை சீர் செய்யும் அதேவேளை இந்த சிக்கலுக்கு பின்னணியில் தவறிழைத் துள்ளவர்கள் எவர் என்பதை கண்டுபிடிக்கும் பணியிலும் ஈடுபடும்.