ஐ.சி.சி. இருபதுக்கு20  போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். 

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று இருபதுக்கு 20 தொடர் ஒன்றில் மூன்று அரைசதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையையும் கோலி படைத்தார். 

இந்நிலையில், சர்வதேச போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இருபது ஓவர் போட்டிக்கான தரவரிசையில் அவுஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச்-ஐ பின்னுக்குத் தள்ளி இந்திய அணியின் விராட் கோலி 892 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆரோன் பிஞ்ச் 868 புள்ளிகளுடன் இரண்டாது இடத்தில் உள்ளார். 

பங்களாதேஷ் அணியின் ஹால்ஸ் 3-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணியின் டூ பிளிஸ்சிஸ் 4-வது இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடங்களுக்குள் இந்திய அணியை சேர்ந்த வேறு யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் ரெய்னா 13-வது இடத்திலும், ரோகித் சர்மா 16-வது இடத்திலும், யுவராஜ் சிங் 20-வது இடத்திலும் உள்ளனர்.