தர­மற்ற பெற்­றோலை கப்­ப­லி­லி­ருந்து இறக்­க­மாட்டேன்

Published By: Priyatharshan

08 Nov, 2017 | 11:40 AM
image

எவர் என்ன கூறி­னாலும் என்னை வீட்­டுக்கு அனுப்­பி­னாலும் நான் அமைச்­ச­ராக இருக்கும் வரை  தர­மில்­லாத பெற்­றோலை கப்­பலில் இருந்து இறக்க மாட்டேன். அத்­துடன் இந்த விட­யத்தில் ஜனா­தி­ப­தியோ அல்­லது பிர­த­மரோ எனக்கு அழுத்தம் பிர­யோகம் செய்­ய­வில்லை. மேலும் இந்த பிரச்­சி­னையை ஒரு சிலர் அர­சி­ய­லாக்க முயற்­சிக்­கின்­றனர். தயவு செய்து இந்த பிரச்­சி­னையை தீர்க்க எனக்கு இட­ம­ளி­யுங்கள் என துறை­முக மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்­ஜூன ரண­துங்க சபையில் தெரி­வித்தார்.

இந்த நிலை­மைக்கு நாட்டை கொண்டு வந்­த­மைக்கு கார­ண­மா­ன­வர்­களை இனங்­காணும் வகையில் விசா­ர­ணையை ஆரம்­பிக்­க­வுள்ளோம். இந்த விசா­ர­ணையின் போது நான் முன்­னின்று செயற்­ப­டுவேன். இதன்­படி குற்­ற­வா­ளி­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­குவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன் 2 கீழ் தினேஷ் குண­வர்­தன மற்றும் அநுர குமார திஸா­நா­யக்க எம்.பிக்கள் வின­விய கேள்­விக்கு பத­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தற்­போ­தைக்கு எமக்கு டீசலில் எந்­த­வொரு குறைவும் இல்லை. பெற்றோல் மாத்­தி­ரமே எமக்கு போதாமல் உள்­ளது. எனினும் நாம் சாதா­ரண தரகின் அடிப்­ப­டை­யி­லேயே எரி­பொ­ருளை கொண்டு வரு­கின்றோம். இந்த பிரச்­சி­னைக்கு தர­மில்­லாத எரி­பொருள் வந்­த­மையே பிர­தான கார­ண­மாகும். எனினும் அந்த கப்­பலை நாம் திருப்பி அனுப்பி விட்டோம். என்­றாலும் இன்று வரை குறித்த கப்பல் திரு­கோ­ண­ம­லையில் தரித்து வைக்­கப்­பட்­டுள்­ளது.  

எவ்­வா­றா­யினும் வியா­ழக்­கி­ழமை பிரச்­சி­னைகள் தீர்த்து சாதா­ரண நிலை­மைக்கு கொண்டு வர முடியும். ஏற்­க­னவே இன்று புதன்­கி­ழமை இரவு 11க்கு வர கூடி­ய­தாக இருந்த கப்பல் 9 மணிக்கு வர­வி­ருப்­ப­தாக எமது செய்­மதி தகவல் தெரி­விக்­கின்­றன. 

அத்­துடன் தற்­போது எமக்கு சந்­தேகம் ஒன்று உள்­ளது. சாதா­ர­ண­மாக பெற்றோல் விநி­யோகம் நடந்து கொண்­டி­ருந்­தது. எனினும் திடீ­ரென வந்த குறுந்­த­க­வலை அடுத்தே நாட்டு மக்கள் பதற்­ற­ம­டைந்­தனர். அத்­துடன் அந்த தகவல் வந்­ததை அடுத்து எமது கணிணி கட்­ட­மைப்­புகள் இயங்­க­வில்லை. எமது சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தில் மின் துண்­டிப்பு கோளாறும் ஏற்­பட்­டது. விநி­யோ­கிப்­ப­தற்கு பெற்றோல் இருந்தும் எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­களில் விநி­யோகம் செய்­யாமல் இருந்­தமை போன்ற சிக்­க­லான பிரச்­சி­னைகள் எமக்கு சந்­தே­கத்தை ஏற்­பட்­டுத்­தி­யுள்­ளன. எவ்­வா­றா­யினும் இது தொடர்­பாக நாம் விசா­ரணை செய்­ய­வுள்ளோம். 

இந்த நிலை­மைக்கு நாட்டை கொண்டு வந்­த­மைக்கு கார­ண­மா­ன­வர்­களை இனங்­காணும் வகையில் விசா­ர­ணையை ஆரம்­பிக்­க­வுள்ளோம். இந்த விசா­ர­ணையின் போது நான் முன்­னின்று செயற்­ப­டுவேன். இதன்­படி குற்­ற­வா­ளி­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­குவோம் .

எமது நாட்டை பொறுத்­த­வ­ரையில் 90 ஆயிரம் மெட்ரிக் தொன்  எரி­பொருள் மாத்­தி­ரமே களஞ்­சி­யப்­ப­டுத்த முடியும். இது நான் அமைச்­ச­ராக பத­வி­யேற்க முன்பு இருந்த நிலை­மைதான். அதுவே  இன்னும் உள்­ளது. இதன்­பி­ர­காரம் பெற்­றோ­லிய கூட்­டு­தா­ப­னத்தில் உள்ள குறை­பா­டு­களை நிவர்த்தி செய்து முன்­செல்ல வேண்டும். 

அத்­துடன் நாம் சாதா­ர­ண­மாக ஒரு நாளைக்கு 2,500 மெட்ரிக் தொன் பெற்­றோ­லையே விநி­யோகம் செய்­கின்றோம். எனினும் ஞாயிற்று கிழமை விநி­யோகம் செய்­வ­தில்லை.  கடந்த சனிக்­கி­ழமை 2,800 மெட்ரிக் தொன் பெற்றோல் விநி­யோகம் செய்­துள்ளோம். பொது­வாக ஞாயிற்­று­கி­ழ­மை­களில் விநி­யோகம் செய்­யா­வி­டினும் கடந்த ஞாயிற்றுக் கிழமை 963 மெட்ரிக் தொன் பெற்றோல் விநி­யோகம் செய்­துள்ளோம். நேற்று முன் தினம் 2,966 மெட்ரிக் தொன் விநி­யோகம் செய்தோம். நேற்­றைய தினம் 3,000 மெட்ரிக் தொன் பெற்றோல் விநி­யோகம் செய்­துள்ளோம். வியா­ழக்­கி­ழமை சாதா­ரண நிலை­மைக்கு நாடு திரும்பும். 

இருந்த போதிலும் வேறு காலங்­களில் 2,500 மெட்ரிக் தொன் கோரிக்கை இருந்­தாலும் தற்­போது மக்கள் பதற்­ற­ம­டைந்­த­மையை அடுத்து 4,700 ‍மெட்ரிக் தொன் பெற்றோல் கோரிக்கை எழும்­பி­யுள்­ளது. 

தர­மில்­லாத பெற்­றோலை எவர் கூறி­னாலும் நான் அமைச்­ச­ராக இருக்கும் வரை கப்பலில் இருந்து இறக்க மாட்டேன். என்னை வீட்டு அனுப்பினாலும் நாட்டுக்கு  தீங்கானதை நான் செய்ய மாட்டேன். அத்துடன் பிரச்சினை விடயத்தில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எனக்கு அழுத்தம் பிரயோகம் செய்யவில்லை. மேலும் இந்த பிரச்சினையை ஒரு சிலர் அரசியலாக்க முயற்சின்றனர். தயவு செய்து இந்த பிரச்சினையை தீர்க்க எனக்கு இடமளியுங்கள் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22