பெற்றோல் விநி­யோ கம் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை வழ­மைக்­குத்­தி­ரும்­ப­வுள்­ளது. அதுவரையில் பாவனைக்குத் தேவை­யான பத்­தா­யிரம் மெட்­ரிக்தொன் பெற்றோல் கையிருப்பில் உள்­ளது. எனினும் டீசல் விநி­யோ­கத்தில் எவ்­விதத் தட்­டுப்­பாடும் இல்லை.

எனவே டீசலை விநி­யோ­கிக்­காது பதுக்கும் எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­களின் அனு­ம­திப்­பத்­தி­ரத்தை இரத்­து­செய்­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம். அத்­துடன் போத்­தல்கள் மற்றும் சிறிய பாத்­தி­ரங்­களில் பெற்றோல் விநி­யோ­கிப்­பதை தடுக்­க­வுள்­ளோம்  என்று பெற்­­றோ­லிய வளங்கள் அபி­வி­ருத்தி அமைச்சர் அர்­ஜுண ரண­துங்க தெரி­வித்தார்.

பெற்றோலை பெற்றுக் கொள்ளும் நிலமை வழமைக்கு திரும்பும் வரையே, இவ்வாறான நடவடிக்கை  மேற்கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றுநிரூபத்தை அமைச்சி சற்றுமுன்னர் வௌியிட்டுள்ளது.