இந்­திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்­டி­யி­லா­வது வெற்றி பெற வேண்டும் என்­பதே என்­னு­டைய கனவு என்று இலங்­கையின் முன்­னணி சுழற்­பந்து வீச்­சாளர் ரங்கன ஹேரத் தெரி­வித்­துள்ளார்.

இலங்கை -– இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர்­வரும் 16ஆம் திகதி கொல்­கத்­தாவில் தொடங்­கு­கி­றது. 

இலங்கை அணி இந்­தியா மற்றும் அவுஸ்­தி­ரே­லிய மண்ணில் இன்னும் வெற்றி பெறவே இல்லை. இந்­திய மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்­ப­துதான் எனது கனவு என்று ஹேரத் கூறி­யுள்ளார்.

இது­கு­றித்து ஹேரத் மேலும் கூறு­கையில், இந்­திய மண்ணில் டெஸ்ட் போட்­டியில் வெற்றி பெற வேண்டும் என்­பது எனது கனவு. அப்­படி வெற்றி பெற்றால் மிகவும் சிறப்­பா­ன­தாக இருக்கும். பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான டெஸ்ட் தொடரை 2–-0 என கைப்­பற்­றி­யது அதிக அளவில் நம்­பிக்­கையை கொடுத்­துள்­ளது.

அதே உத்­வே­கத்­துடன் விளை­யா­டினால் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற முடியும் என்றார்.