"நாமும் மலையக தொழிலாளர்களின் ஒரு பகுதியினரே"

Published By: Digital Desk 7

06 Nov, 2017 | 02:53 PM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா லெமன்மோரா தோட்ட தொழிலாளர்கள்  தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

லெமன்மோரா தோட்டத்தில் உள்ள 28 தொழிலாளர் குடும்பங்களில், 80 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு குறித்த தோட்டத்தில் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி போன்ற தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக ஆதங்கம் தெரிவித்து இப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

"எமது தோட்டம் தனியார் தோட்டம் என்பதால் எமக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றதா?" என கேள்வி எழுப்பிய வண்ணம் போராட்டத்தை முன்னெடுத்துள்ள லெமன்மோரா தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளில் பெரிதாக பாதிக்கப்பட்டு பின்தள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

சுகாதார வசதி, வீட்டு வசதி, குடிநீர் பிரச்சினை, வீதி என முக்கிய அடிப்படை பிரச்சினைகள் இவர்களுக்கு பல வருட காலமாக செய்து கொடுக்காமல் கவனிப்பாரற்ற நிலையில் வாழ்க்கையை கொண்டு செல்வதாக போராட்டத்தின் போது தெரிவித்தனர்.

"இந்த நாட்டில் வாக்குரிமை பெற்ற தோட்ட தொழிலாளர்களில் நாங்களும் வாக்குகளை அளிக்கும் உரிமையுடைவர்களாக காண்கின்றோம். இருந்தும் எமது உரிமைகளுக்கு தீர்வுகளை பெற்று தராது அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் எம்மை வேறுப்படுத்தியே பார்க்கின்றனர்.

எனவே இப்போராட்டத்தின் ஊடாக நாமும் மலையக தொழிலாளர்களின் ஒரு பகுதியினரே என்பதை ஊடகங்கள் ஊடாவது தெரிந்து கொண்டு எமது நிலைமையை ஆராய்ந்து பார்க்கும்படியும் எமது பிரச்சினைகளை தீர்க்கும்படியும்  கேட்டுக் கொள்கின்றோம்" என ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டோர் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04