கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், 40 பேர் காயமடைந்துள்ளனர்.

 குறித்த பஸ் வண்டியானது அதிக வேகத்துடன் பயணித்த காரணத்தாலேயே இந்த விபத்து இடம்பெற்றிருகலாமென தெரிவிக்கப்படுகின்ற நிலையில் புத்தளம் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை காயமடைந்தவர்கள் புத்தளம் மற்றும் முந்தல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸின் சாரதி முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக செய்திகளுக்கு 

பஸ் விபத்தில் நால்வர் பலி 30 பேர் படுகாயம்