புத்தளம் - மதுரங்குளி முந்தல் 10ஆம் கட்டையில் இன்று அதிகாலை தனியார் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளதுடன் 30 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதையில் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸானது வீதியை விட்டு விலகியமையாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.