கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் பாட­சா­லை­களை விட்டு மாண­வர்கள் இடை­வி­லகும் தொகை அதி­க­ரித்து வரு­வ­தாக பாட­சாலைச் சமூ­கத்­தினர் மற்றும்  பொது அமைப்­புக்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

கிளி­நொச்சி – முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் பின்­தங்­கிய கிரா­மங்­களில் அண்­மைய நாட்­க­ளாக பாட­சா­லை­களை விட்­டு ­மா­ண­வர்கள் இடை­வி­லகும் தொகை மற்றும் ஒழுங்­கற்ற வர­வு­களை கொண்ட தொகை என்­பன சடு­தி­யாக அதி­க­ரித்து வரு­கின்­றன என்றும் இது தொடர்பில் பெற்­றோர்­கள்­ ச­மூக நலன் விரும்­பிகள் பொறுப்­பான அதி­கா­ரிகள் கூடிய கவ­ன­மெ­டுக்­க­வேண்டும் என பல்­வேறு தரப்­புக்­களும் கோரிக்கை விடுத்­துள்­ளன.

குறிப்­பாக முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் தேராவில், விசு­வம­டு, உடை­யார்­கட்டு உள் 

­ளிட்ட பகு­தி­க­ளிலும் துணுக்காய், மாந்தை கிழக்­குப்­ப­கு­தி­க­ளிலும் மாண­வர்கள் பாட­சா­லை­களை விட்டு இடை­வி­ல­கு­கின்ற அல்­லது ஒழுங்­கற்ற வர­வு­க­ளைக்­கொண்ட தொகை அதி­க­ளவில் காணப்­ப­டு­கின்­றன.

குறிப்­பாக இவ்­வாறு பின்­தங்­கிய பிர­தேசங்­களில் வாழ்­கின்ற குடும்­பங்­களின் பொரு­ளா­தார நெருக்­கடி மற்றும் பாட­ச­ா லை­க­ளுக்­கான போக்­கு­வ­ரத்து வச­திகள் இன்மை இவ்­வாறு இடை­வி­ல­கு­வ­தற்கும் ஒழுங்­கற்ற வர­வு­க­ளுக்கும் கார­ண­மாக இருப்பதாக பல பாட­சாலை அதி­பர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இதே­போன்று கிளி­நொச்சி மாவட்­டத்தின் பின்­தங்­கிய கிரா­மங்­களில் இவ்­வாறு இடை­வி­ல­கு­கின்ற மாண­வர்­களின் எண்­ணிக்­கையும் ஒழுங்­கற்று வரு­கின்ற மாண­வர்­களின் எண்­ணி­க்­கையும் அதி­க­ரித்­துக்­கா­ணப்­ப­டு­கின்­றது.

கிளி­நொச்சி மாவட்­டத்தில் பல பகு­தி­க­ளிலும் இவ்­வாண்டில் பாட­சா­லைக­ளுக்­குச்­செல்­லாத மற்றும் ஒழுங்­கற்ற வர­வு­களைக் கொண்ட நூற்­றுக்கு மேற்­பட்ட மாண­வர்கள் நீதி­மன்ற கட்­ட­ளைக்கு அமை­வாக பாட­சா­லை­க­ளிலும் சிறுவர் இல்­லங்­க­ளிலும் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டனர். இருந்­த­போதும் இவ்­வாறு பின்­தங்­கிய பிர­தே­சங்­க­ளிலும் மேலும் இந்­தத்­தொகை அதி­க­ரித்­துக்­கா­ணப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டப்பட்டுள்­ளது.