சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 கிரிக்­கெட்டில் அதிக ஓட்­டங்­களை எடுத்த வீரர்­களில் இலங்கை அணியின் முன் னாள் வீரர் தில­க­ரத்ன டில்­ஷானை முந்திய இந்­திய அணித் தலைவர் விராட் கோஹ்லி இரண்­டா­வது இடம் பிடித்­துள்ளார்.

நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற  இரு­ப­துக்கு 20 போட்­டியில் விராட் கோஹ்லி 65 ஓட்­டங்­களை எடுத்தார். 12ஆ-வது ஓட்டத்தை அவர் தொட்­ட­போது டில்­ஷானை முந்தி சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் அதிக ஓட்­டங்­களைப் பெற்ற வீரர்­களில் 2ஆ-வது இடத்தை பிடித்தார்.

விராட் கோஹ்லி 54 போட்­டி­களில் விளை­யாடி 1943 ஓட்­டங்­களை எடுத்து 2ஆ-வது இடத்தில் உள்ளார். நியூ­ஸி­லாந்தின் மெக்­கலம் 2140 ஓட்­டங்­க­ளு­டனும் முத­லி­டத்தில் உள்ளார். டில்ஷான் 1889 ஓட்­டங்­க­ளுடன் 3ஆ-வது இடத்தில் உள்ளார்.

அனைத்து வகை­யான இரு­ப­துக்கு 20 போட்­டி­க­ளிலும் விராட் கோஹ்லி 7 ஆயிரம் ஓட்­டங்­களை தொட்­டுள்ளார். 

குறைந்த போட்­டி­களில் அதிக ஓட்­டங்­களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.