இந்­தி­யா­வுக்கு எதி­ரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை­யா­ட­வுள்ள இலங்கை அணி நேற்று இரவு அறி­விக்­கப்­பட்­டது. அதன்­படி நீண்ட நாட்­க­ளாக ஓய்வில் இருந்த அஞ்­சலோ மெத்­தியூஸ் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார். அதே­வேளை மூன்­றா­வது வீர­ராக கள­மி­றங்கும் இளம் வீரர் குசல் மெண்டிஸ் இந்­தி­யா­வுக்கு எதி­ரான டெஸ்ட் தொட­ரி­லி­ருந்து கழற்றிவி­டப்­பட்­டுள்ளார்.

ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நடை­பெற்ற பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான மூன்று வகைக் கிரிக்கெட் தொடர் கடந்த 29ஆம் திகதி நிறை­வுக்கு வந்­தது. அதனைத் தொடர்ந்து இம்­மாதம் 16ஆம் திகதி இலங்கை மற்றும் இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான முத­லா­வது டெஸ்ட் போட்டி கொல்­கத்தா ஈடன் கார்டன் மைதா­னத் தில் ஆரம்­

ப­மா­க­வுள்­ளது.

இந்­தி­யா­வுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொள்­ள­வுள்ள இலங்கை அணி அவ்­வ­ணி­யுடன் மூன்று டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொட­ரிலும், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இரு­ப­துக்கு 20 போட்­டிகள் கொண்ட தொட­ரிலும் விளை­யா­ட­வுள்­ளது.

இந்­நி­லையில் இந்­தி­யா­வுக்கு எதி­ரான டெஸ்ட் தொட­ருக்­கான இலங்கை அணி நேற்று அறி­விக்­கப்­பட்­டது. 

தினேஷ் சந்­திமால் தலை­மை­யி­லான அவ்­வ­ணியில் திமுத் கரு­ணாரத்ன, தனஞ்­சய டி சில்வா, சதீர சம­ர­விக்­கி­ரம, அஞ்­சலோ மெத்­தியூஸ், லஹிரு திரி­மான்ன, ரங்­கன ஹேரத், சுரங்க லக்மால், தில்­ருவன் பெரேரா, லஹிரு கமகே, சந்­தகான், விஷ்வ பெர்­னாண்டோ, தஷுன் சானக்க, நிரோஷன் திக்­வெல்ல மற்றும் ரெஷேன் சில்வா ஆகியோர் இடம்­பெற்­றுள்­ளனர்.

நீண்ட நாட்­க­ளாக காயம் கார­ண­மாக ஓய்­வி­லி­ருந்த இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் மீண்டும் அணியில் இணைந்­துள்ளார்.

அனைத்து வகை­யிலும் பலம் பொருந்­திய இந்­திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்­கொள்ள அனுபவ வீரர்கள் அணியில் இருப்­பது கட்­டாயம்.

அந்­த­வ­கையில் அஞ்­சலோ மெத்­தி­யூஸின் வருகை இலங்­கைக்கு பல­மாக அமையும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அதே­வேளை அண்­மைய போட்­டி­களில் தனது திற­மையை நிரூ­பிக்கத் தவ­றிய இளம் வீரர் குசல் மெண்டிஸ் இந்தியத் தொடருக்கான இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்பட வில்லை.

அதே­வேளை குசல் ஜனித் பெரேரா மற்றும் அசேல குண­ரத்ன ஆகி­யோரும் காயத்­தி­லி­ருந்து மீண்டு போட்­டி­களில் கள­மி­றங்க தயா­ரா­க­வி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

எதிர்­வரும் 16ஆம் திகதி கொல்­கத்­தாவில் இலங்கை  – இந்­திய அணிகள் மோதும் முத­லா­வது டெஸ்ட் ஆரம்­ப­மா­க­வு­ள்­ளது. இரண்­டா­வது டெஸ்ட் போட்டி நாக்­பூரில் எதிர்வரும் 24ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. அதேபோல் மூன்­றா­வது டெஸ்ட் போட்டி டெல்­லியில் எதிர்­வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.