சீன நாட்­ட­வர்கள் 150 பேருக்கு கொழும்பில் உள்ள சுதந்­திர சதுக்­கத்தில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் திரு­மணம் நடை­பெ­ற­வுள்­ளது. கொழும்பில் உள்ள சீனத் தூத­ரகம் இந்த நிகழ்­வுக்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கி­றது.

சுதந்­திர சதுக்­கத்தில் வரும் டிசம்பர் 17ஆம் திகதி இந்த பாரிய திரு­மண நிகழ்வு நடை­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த நிகழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராகப் பங்­கேற்று, 75 சீன திரு­மண இணை­யர்­க­ளுக்கும், திரு­மணச் சான்­றி­தழ்­களை வழங்­குவார்.

திரு­மணம் முடிந்த பின்னர், அன்­றி­ரவு பத்­த­ர­முல்ல -வோட்டர் எட்ஜ் விடு­தியில் இராப்­போ­சன விருந்து இடம்­பெறும். மறுநாள், மூன்று குழுக்­க­ளாக சீன இணை­யர்கள், யால, சிகி­ரியா, கண்டி ஆகிய இடங்­க­ளுக்கு அழைத்துச் செல்­லப்­ப­டுவர்.

பெரு­ந­கர மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சு, பீஜிங்கில் உள்ள இலங்கை தூத­ரகம், சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியன இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.