முல்­லைத்­தீவு நகரில் அமைந்­துள்ள மஹ் சுப்­ராணி பள்­ளி­வா­சலில் நேற்றுமுன்தினம் நள்­ளி­ரவு துணி­கர திருட்டு சம்­பவம் ஒன்று நடை­பெற்­றுள்­ளது.

குறித்த பள்­ளி­வா­ச­லுக்குள் புகுந்த திரு­டர்கள் பள்­ளி­வா­சலில் காணப்­பட்ட உண்­டியலை பணத்­துடன் தூக்கி சென்­றுள்­ள­ தோடு பள்­ளி­வா­ச­லுக்கு வரு­கை­தந்து தங்­கி­யி­ருந்த யாத்­தி­ரி­கர்­களின்  பணத்­தையும் திருடிச் சென்­றுள்­ளனர். இந்த திருட்டு சம்­பவம் தொடர்பில் முல்­லைத்­தீவு விசேட குற்­றத்­த­டுப்பு பொலிஸார்  விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.