சைட்டம் மருத்துவ கல்­லூ­ரியை மூட வலி­யு­றுத்­தியும் ஜனா­தி­பதி முன்­வைத்த தீர்­வை நிரா­க­ரித்தும் அரச பல்­க­லை­க்க­ழக மாண­வர்­களின் பெற்­றோர் இன்று சாகும்வரை­யி­லான உண்­ணா­வி­ரத போராட்­டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தப் போராட்­டத்­திற்கு 27 பேரின் ஆதரவு இருப்­ப­துடன் முதற்­கட்­ட­மாக ஐந்து பேர் போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ளனர்.

இது தொடர்­பாக அரச பல்­க­லைக்­க­ழக மாணவர்களின் பெற்றோர் சங்­கத்தின் கம்­பஹா கிளை தேசிய அமைப்­பாளர் அசோக ரங்­கன கேச­ரிக்கு தெரிவிக்கையில்,

மாலபே சைட்டம் மருத்­துவ கல்­லூ­ரியை முழு­மை­யாக மூடு­மாறு வலி­யு­றுத்தி தொடர்ந்து போராட்­டங்கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. இதன்­படி அரச பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் ஒரு புறமும் பெற்­றோர் மறு­பு­றமும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்­தி­னரும் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வந்­தனர்.

எனினும் சைட்டம் பிரச்­சிைன தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மையில் தீர்வுத்திட்­ட­மொன்றை முன்­வைத்­தி­ருந்தார். சைட்டம் கல்­லூ­ரியை இலா­பமீட்டும் நிறு­வ­ன­மாக இல்­லாமல் செய்து புதிய நிறு­வ­ன­மொன்றின் கீழ் கொண்டுவரப் போவ­தாக கூறினார். இந்த திட்­டத்­திற்கு அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்­தி­னரும் பல்­க­லைக்­க­ழக போராசி­ரி­ யர்­களும் ஆத­ரவு வழங்­கி­யுள்­ளனர். எனி னும் அரச பல்­க­லை­க்க­ழ­கத்தின் மாணவர்­க ளும், பெற்­றோரும் சைட்டம் கல்­லூ­ரியை முழு­மை­யாக மூடு­மாறு வலி­யு­றுத்­தி­யுள்­ள னர். 

இதன்­படி சைட்டம் மருத்துவக் கல்­லூரியை மூட வலி­யு­றுத்­தியும் ஜனா­தி­பதி முன்­வைத்த தீர்­வினை நிரா­க­ரித்தும் அரச பல்­க­லை­க­ழக மாண­வர்­களின் பெற்­றோர் இன்று சாகும்வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போரா ட்­டத்தில் ஈடுபடவுள்­ளனர்.

இந்தப் போராட்­டத்­திற்கு 27 பேரின் ஆதரவு இருப்­ப­துடன் முதற்­கட்­ட­மாக ஐந்து பேர் போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள னர். இந்தப் போராட்டம் எங்கு நடத்துவது தொடர்பான அறிவித்தல் இன்று திங்கட் கிழமை விடுக்கப்படும் என்றார்.