முன்­னேற்­பா­டுகள் இன்­மையே பெற்றோல் தட்­டுப்­பாட்­டிற்கு காரணம்

Published By: Priyatharshan

06 Nov, 2017 | 10:09 AM
image

நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள பெற் றோல் தட்­டுப்­பாட்­டுக்கு அர­சாங்­கத்தின் முன் ஏற்­பா­டு­க­ளற்ற செயற்­பா­டு­களே கார ணம் என சுட்­டிக்­காட்­டிய கூட்டு எதிர்க்­கட்சி பக­லி­ரவு பாராது பணி­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால இது குறித்து பராமு­க­மா­க­வி­ருப்­பது ஏன் எனவும் கூட்டு எதிர்க் கட்சி கேள்வி எழுப்­பி­யுள்­ளது.  

புஞ்­சி­பொ­ர­ளையில் அமைந்­துள்ள ஸ்ரீவ­ஜி­ரா­ஷர்ம பௌத்த நிலை­யத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே கூட்டு எதிர்க்கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்தன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கை யில்,

தற்­போது நாட்டில்  நிலவும் பெற்றோல் தட்­டுப்­பாடு கார­ண­மாக மக்கள் சிர­மப்­ப­டு­வதை காணக் கூடி­ய­தாக உள்­ளது. யுத்தம் இடம்பெற்ற காலப்­ப­கு­தியில் கூட பெற்­றோ­லுக்கு தட்­டுப்­பாடு இவ்­வாறு ஏற்­ப­ட­வில்லை.   அவ்­வாறு தட்­டுப்­பாடு ஏற்­பட்­டாலும் நாட்டின் பாது­காப்பு கருதி குறிப்­பிட்ட அள­வி­லான பெற்றோல் களஞ்­ சி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும். ஆனால் தற்­போ­தைய  ஆட்­சியில் அவ்­வா­றான முன் ஏற்­ பாடு எதுவும் கிடை­யாது. அதன் கார­ண­மா­கவே நாட்டில் பாரிய பெற்றோல் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது 

முன்னாள் ஜனா­தி­ப­தியின் ஆட்­சியில் யுத்தம் உட்­பட பல்­வே­று­பட்ட பிரச்­சி­னைகள் நாட்டில் நில­விய போதும் நாம் மக்­க­ளது ஜீவ­னோ­பா­யத்­துடன் விளை­யா­ட­வில்லை.  மக்­க­ளது உண­வு ­தே­வை­யினை நாம் சீராக நடை­மு­றைப்­ப­டுத்­தினோம். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  விவ­சா­யத்­துறை அமைச்­ச­ராக இருந்த பொழுது வர்த்­தக மற்றும் நுகர்வு விட­யங்­களில் அவர் எம்­முடன் பக­லி­ரவு பாராது பாடுபட்டதை என்னால் மறக்க முடியாது. எனினும் அத்தகைய ஒருவர் தற்போது ஏன் இவ்விடயங்களில் முறை யான வேலைத்திட்டங்களை அமுல்படுத் துகின்றார் இல்லை என்பது தான் ஆச்சரிய மாகவுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38