அமெரிக்காவின் டெக்சாஸ் பிராந்தியத்திலுள்ள தேவாலயமென்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் டெக்சாஸ் பிராந்தியத்திலுள்ள சதர்லாண்ட் ஸ்பிரிங்ஸிலுள்ள தேவாலயமொன்றில் புகுந்த துப்பாக்கிதாரி அங்கு கண்மூடித்தனமான துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

துப்பாக்கிதாரி தேவாலயத்தில் புகுந்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளும் போது ஞாயிறு தின  ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்துள்ளது.

குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் 26 வயதுடைய டெவின் பற்றிக் கெலியெனவும் குறித்த சம்பவத்தில் அவரும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளர்.

துப்பாக்கிதாரியின் காரும் அவருடைய சூட்கேஸ் பெட்டியொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவத்தின் போது தேவாலயத்தின் போதகரின்  14 வயதுடைய மகளும் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.