வௌ்ளவத்தை பிரதேசத்திலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பொன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, - 13 ஜிந்துப்பிட்டியைச் சேர்ந்தவரே இவ்வாறு வெள்ளவத்தையில் தூக்கிட்டு தற்கொசெய்துகொண்டுள்ளார்.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் 37 வயதுடைய எம்.ஆர்.திலகராஜா என பொலிஸார் தெரிவித்தனர்.

கடமை புரியுமு் தொடர்மாடிக் குடியிருப்பின் நுழைவாயில் தூண் ஒன்றிலேயே குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலைச் சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.