முன்னாள் விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைவர் என கூறப்படும் எமில் காந்தனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மற்றும் ரெட் நோட்டீஸ் என்பன இன்று மேல் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

அவர் சரணடைவதாக தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்ததை அடுத்தே கொழும்பு சிறப்பு நீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.