பொகவந்தலாவை  போனோகோட் தோட்டத்தில் தரம் 5 இல் கல்விபயிலும் பத்துவயது சிறுமியை தாக்கி துன்புறுத்தலுக்குட்படுத்திய சித்தி, சிறுமியின் மைத்துனர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற பதில்  நீதிவான் உத்தரவிட்டார்.

கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் நீதிமன்ற பதில்  நீதிவான்   முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் உடம்பில் உள்காயங்கள் காணப்படுவதோடு சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனையின் பின் குறித்த சிறுமி ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது குறித்த சிறுமியை அவருடைய தந்தையாரிடம் ஒப்படைக்கபட்டார். 

சம்பவம் தொடர்பான மேலதிக செய்திகளுக்கு 

தாய் வெளியூரில் தந்தை கொழும்பில் மைத்துனராலும் சித்தியாலும் துன்புறுத்தப்பட்ட சிறுமி மீட்பு :இருவர் கைது