சவூதியில் பிரபல கோடீஸ்வர் உட்பட இளவரசர்கள் மற்றும் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள்  என 15 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபல கேடீஸ்வரரான வலித் பின் தலால் மற்றும் இளவரசர்கள், முன்னாள்,இந்நாள் அமைச்சர்கள், தொழில் அதிபர்கள் என பலர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டமை சவூதியில் பெரும் பரபரப்பையேற்படுத்தியுள்ளது.

இதேவேளை அங்கிருந்து எவரும் நாட்டை விட்டு தப்பிச்செல்ல முடியாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.