கனடாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் டேவிட் மெகினன் கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட  கனேடிய உயர் ஸ்தானிகர் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்காவை பல்லேகலையிலுள்ள அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார்.

சமஷ்டி ஆட்சி மற்றும் மாகாண ஆட்சி முறைமை பற்றி உயர் ஸ்தானிகர் கருத்துப் பரிமாறினார். அதன்போது அவர் தெரிவித்தாவது,

தமது நாடான கனடாவில் சமஷ்டி ஆட்சி முறைமை அமுலில் உள்ளது. இருப்பினும் அது இலங்கைக்குப் பொருந்துமா இல்லையா? என்பதைத் தன்னால் கூற முடியாது என்று தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் தற்போது புதிய அரசியல் அமைப்பு பற்றி விரிவாக மத்திய அரசு ஆராய்து வருவதாகவும் அது பற்றி கூடுதல் அக்கறை செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

முதலமைச்சரால் உயர் ஸ்தானிகருக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.