பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை : இலங்கை வருகிறது எரிபொருள் கப்பல்

Published By: Priyatharshan

04 Nov, 2017 | 10:44 AM
image

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லையெனவும் பிரதி அமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் எடுத்துவரும் கப்பலொன்று நாளை மறுதினம் திங்கட்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாளாந்த டீசல் விநியோகம் தொடர்பாக நுகர்வோர் அச்சம் கொள்ள தேவையில்லையெனவும்  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கட்டமைப்பிற்குள்  80 சதவீத டீசல் தொகை இன்று மாலைக்குள் விநியோகம் செய்யப்பட்டுவிடும் எனவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

எவ்வாறிருப்பினும், பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நேற்று வெளியான தகவலினால், நாட்டின் சில பகுதிகளில் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக வாகன சாரதிகள் நீண்ட வரிசையில் வாகனங்களை நிறுத்திவைத்திருந்தனர்.

இதன் காரணமாக கொழும்பு, காலி வீதி மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது. 

இதேவேளை, நேற்று பெற்றோல் நிலையங்கள் பகிஷ்கரிப்பு எனும் செய்தி பரவியதால் கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையங்களில் கடுமையான சன நெரிசல் நிலவியது.

நேற்று மாலை முதல் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த எந்தவொரு பகுதியிலும் தற்போது பெற்றோல் இல்லை.

இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் அறிவித்திருந்தபோதிலும் எரிபொருள் முடிந்த நிலையங்களுக்கு இதுவரை பெற்றோல் விநியோகம் செய்யப்படவில்லை.

இந்நிலையிலேயே எதிர்வரும் திங்களன்று எரிபொருள் கப்பல் ஒன்று இலங்கை வரவுள்ளதாகவும், செவ்வாய்க்கிழமைக்குள் நிலைமை வழமைக்கு திரும்பி விடுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31