சென்­னையில் 500 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு

Published By: Priyatharshan

04 Nov, 2017 | 02:35 PM
image

தமி­ழ­க­மெங்கும் தொடர்ந்து கன­மழை பெய்து வரு­கின்­ற­மையால் சென்னை வெ ள்ளக்காடாக மாறி­யுள்­ளது. இதனால் மக்­களின் இயல்பு வாழ்க்கை முடங்­கி­யுள்­ளது. இந்­நி­லையில் சென்­னையில் மேலும்  500 மி.மீ. அள­வுக்கு மழை பெய்ய வாய்ப்­புள்­ள­தாக பி.பி.சி. செய்­திச்­சேவை எச்­ச­ரித்­துள்­ள­மையால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு சென்­னையில் ஒரே நாளில் 500 மி.மீ.மழை பெய்யும் என முன்­கூட்­டியே கணித்­தது பி.பி.சி. அதைப்­போ­லவே பெரு­மழை கொட்டித் தீர்த்து நக­ரமே வெள்­ளத்தில் மிதந்­தது. இதனால் பி.பி.சி. வானிலை அறிக்கை முக்­கி­யத்­துவம் பெற ஆரம்­பித்­தது. இந்­நி­லையில், பி.பி.சி. வானிலை செய்­திப்­பி­ரிவு தனது ட்விட்­டரில் நேற்­று­முன்­தினம் மாலை ஒரு தக­வலை வெளி­யிட்­டது. அந்த தக­வலில் இந்­தியா மற்றும் இலங்கை, (புதுச்­சேரி, கேரளா, தமி­ழகம்) ஆகிய பகு­தி­களில் பலத்த மழை பெய்ய வாய்ப்­புள்­ளது. சனிக்­கி­ழ­மை ­(இன்று) கட­லோர ஆந்­தி­ரா­விலும் மழை பெய்யும் என்று தெரி­வித்­துள்­ளது. மற்­றொரு ட்விட்டில் "தென்­கி­ழக்கு இந்­தியா மற்றும் இலங்கை அருகில் வங்­கக்­க­டலில் உரு­வா­கி­யுள்ள குறைந்த காற்­ற­ழுத்தம், அடுத்த சில நாட்­களில் வெள்­ளத்தை ஏற்­ப­டுத்தும் அபா­ய­கட்ட அள­வுக்கு மழையை கொண்டு வரும்" என்று கூறப்­பட்­டி­ருந்­தது. பி.பி.சி. கூறி­யதை போலவே  வெள்ள அபாயம் ஏற்­படும் அள­வுக்கு சென்­னையில் நேற்­று­முன்­தினம் இரவு மழை பெய்­தது. நகரின் பல பகு­திகள் வெள்­ளக்­கா­டா­கி­யுள்­ளன.

 இதே­வேளை நேற்று பி.பி.சி. வெளி­யிட்ட ட்விட்டில் 500 மில்லி மீற்றர் அள­வுக்கு  மழை பெய்­யலாம். இன்னும் வெள்­ளத்­திற்கு வாய்ப்­புள்­ளது. நிலச்­ச­ரி­வுகள் ஏற்­பட வாய்ப்­புள்­ளது என கூறப்­பட்­டுள்­ளது. சென்­னையில் ஏற்­க­னவே 200 மி.மீ. மழை கடந்த 3 நாட்­களில் பெய்­து­விட்­டது. எதிர்­வரும் சில நாட்­களில் 300-–500 மி.மீ. பெய்யக்கூடும்.  இன்னும் அதி­க­பட்சம் 500 மி.மீ. மழை சென்­னையில் பெய்­யக்­கூடும் என கூறி­யுள்­ளது. பி.பி.சி.யின் இந்த அறி­விப்பு அச்­சத்தை  ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதனால் சென்னை மக்கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு இடம்­பெ­யர வேண்­டிய சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17