சம்­பியன்ஸ் லீக் கால்­பந்து தொடரில் டோட் டன்ஹம் ஹாட்ஸ்பர் அணி­யிடம் ரியல் மட்ரிட் அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்­தது.  

அண்மைக் கால­மாக மட்ரிட் அணி வெற்­றி­களைக் குவிக்க திணறி வரு­கி­றது.

இந்­நி­லையில் 'எச்' பிரிவில் இடம் பெற்­றுள்ள இவ்­விரு அணி­க­ளுக்கும் இடை­யே­யான லீக் போட்டி லண்­டனில் நடை­பெற்­றது. 

விறு­வி­றுப்­பாக நடந்த இந்தப் போட்­டியில் ஹாட்ஸ்பர் அணி 3–-1 என்ற கோல் கணக்கில் வென்று அசத்­தி­யது. 

இதன்மூலம் இத்­தொ­டரில் மான்­செஸ்டர் சிட்டி அணிக்கு பிறகு காலி­று­திக்கு முந்­தைய சுற்­றுக்கு ஹாட்ஸ்பர் தகுதி பெற்­றது. ரியல் மட்ரிட் அணிக்கு இன்னும் 2 போட்டி கள் எஞ்சியுள்ளன.