"ஏக்­கிய ரட்ட" ஒரு­மித்த நாடு என்­ப­ன­வற்­றையே பயன்­ப­டுத்­த­வேண்டும்

Published By: Priyatharshan

04 Nov, 2017 | 03:12 PM
image

ஜே.ஆர். ஜய­வர்­தன அர­சாங்கம் கொண்­டு­வந்த அர­சி­ய­ல­மைப்பில் மக்­க­ளது கருத்­துக்கள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. ஆனால் தற்­போது நல்­லாட்சி அர­சாங்கம் கொண்டு வர­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பில் மக்­க­ளது கருத்­துக்கள் நிச்­ச­ய­மாக உள்­வாங்­கப்­படும் என ஐக்­கிய தேசிய கட்­சியின் கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஜித் மான்­னப்­பெ­ரும தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

ஒரு நாட்டை உரு­வாக்­கவும்,   வழி­ந­டத்திச் செல்­லவும் பல வழி­மு­றைகள் இருந்த போதிலும் அவற்றுள் பிர­தான கார­ணி­யாக இருப்­பது அர­சி­ய­ல­மைப்பு ஆகும். ஆட்சி புரி­யவும் சட்­டங்­களை வகுக்­கவும் அர­சி­ய­ல­மைப்பின் விதி­மு­றை­களின் ஊடா­கவே முடியும் என்­பது அர­சியல்வாதி­களும் அர­சியல் ஆய்­வா­ளர்­களும் அறிந்த உண்­மை­யாகும்.

கடந்த காலங்­களில் அர­சியல்வாதிகள் தமது கட்சி நலன் கருதி  சில சிந்­த­னைத்­திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தினர். குறிப்­பாக மஹிந்த சிந்­தனை, ரணில் சிந்­தனை, சந்­தி­ரிகா சிந்­தனை ஆகி­ய­வற்றைக் குறிப்­பி­டலாம். ஆனால் அவை யாவும் அர­சியல் நலன் கரு­தியோ நாட்டின் எதிர்­காலம் கரு­தியோ உரு­வாக்­கப்­பட்­ட­வை­யல்ல.

1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க தேர்தல் முறை­மையில் மாற்­றங்­களைக் கொண்டு வர முனைந்த போதிலும்  அது சாத்­தி­ய­ப்ப­டாமல் போனது. 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜய­வர்த்­தன கொண்­டு­வந்த அர­சி­ய­ல­மைப்பு மிகவும் பலம் பொருந்­தி­ய­தாக காணப்­பட்­டது. தற்­போது  காலத்தின் தேவை கரு­தியே புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்க நாம் முயற்­சித்து வரு­கின்றோம்.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்த வித­மா­கவே மஹிந்த ராஜ பக்­ ஷவும் புதிய அர­சியல் யாப்­பினைக் கொண்டு வரு­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்தார். ஆனால் அவரும் அவ­ரது கட்­சி­யி­னரும் இதற்கு இப்­போது எதிர்ப்­பினைத் தெரி­வித்து வரு­வது எமக்கு ஆச்­சரி­யத்தை தரு­கி­றது. கூட்டு எதி­ர­ணி­யினர் பாரா­ளு­மன்றம் முன்­பாக அண்­மையில் எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யி­ருந்­தனர். கொள்­கை­யற்ற அர­சி­ய­லையே இவர்கள் நடத்தி வரு­கின்றனர்.

சுமார் முப்­பது வருட காலம் நாட்டில் நில­விய பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒரு போதும் வழி சமைக்­காது. பௌத்த மதத்­துக்கும் எவ்­வ­கை­யிலும் பாதிப்பு ஏற்­ப­டாது. மக்­களை திசை திருப்பி தமது அர­சி­யலை முன் கொண்டு செல்­வதே கூட்டு எதி­ர­ணி­யி­னரின் இலக்­காக உள்­ளது. இடைக்­கால அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் காலம் தாழ்த்­தப்­பட்­டா­லும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வது உறுதி.

"ஏக்­கிய ரட்ட" என்னும் ஒரு­மித்த நாடு என்ற பதத்­தினை நாம் பயன்­ப­டுத்த வேண்டும். அப்­ப­த­மா­னது பிரி­வி­னைக்கு வழி­வ­குக்­காது. ஒரு காலத்தில் எம்­முடன் பல தரப்­பட்ட விட­யங்­களில் முரண்­பட்ட சம்­பந்தன் தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் உட்­பட பல

விட­யங்­களில் ஒத்­து­ப்போ­கின்றார் என் றால் ஏன் ஏனை­யோரால் எம்­முடன் ஒத்­துப்­போக முடி­யாது?

ஆசி­யாவின் சிறந்த நாடாக எமது நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது எமது நோக்­க­மாகும். ஐக்­கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் விடு தலை முன்னணி, எதிர்க்கட்சி என நாம் பிரிந்து செயற்பட்டால் எவ்வாறு நாடு அபி விருத்தியை நோக்கிச் செல்லும்? சகலரும் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டிய தருண மிது. ஜனாதிபதி சர்வகட்சி மாநாடு நடத்து வதாக தெரிவித்திருந்தார். அதில் சகல கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்மொழியலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:41:00
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11