யுத்­தத்தை நிறை­வு­செய்த பின்னர் நாட்­டி­லுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தரத்தீர்வு காண்­ப­தற்கு நான் ஆவ­லாக இருந்தேன். அது குறித்து சகல தரப்­பி­ன­ரு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகை­யி­லான தீர்வை முன்­வைப்­ப­தற்கு எதிர்­பார்த்­தி­ருந்தேன்.  

எனவே அது தொடர்பில் பேச்­சு­வார்த்­ததை நடத்­து­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஐக்­கிய தேசியக் கட்சி உட்­பட எதிர்க்­கட்­சி­யி­லுள்ள ஏனைய கட்­சி­க­ளுக்கும் அழைப்பு விடுத்தேன். எனினும் அக்­கட்­சிகள் பேச்­சு­வார்த்­தைக்கு முன்­வ­ர­வில்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

எம்­பி­லி­ப்பிட்­டியில் நேற்­று­முன்­தினம் இரவு நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கெள­ர­வ­ம­ளிக்­கப்­ப­ட­வேண்­டிய தேரர் கள், தற்­போது சில­ருக்கு  காவி­தா­ரி­க­ளா­கி­யுள்­ளனர். எனினும் நாம் தேரர்­க­ளுக்கு வழங்க வேண்­டிய கெள­ர­வத்­தினை என்றும்  வழங்­கி­வ­ரு­கிறோம்.   

மேலும் தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லேயே பேசப்­ப­டு­கி­றது. அவ்­வா­றா­ன­தொரு அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ரு­வ­தற்கு மக்கள் ஆணை வழங்­க­வில்லை. அர­சி­ய­ல­மைப்பு சபை­யொன்றை உரு­வாக்­கு­வ­தாயின் அதற்கு மக்­களின் ஆணை அவ­சி­ய­மாகும். அதற்­கான ஆணை­யினை மக்கள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கோ, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கோ, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கோ வழங்­க­வில்லை.

மேலும் யுத்­தத்தை நிறை­வு­செய்­யு­மாறே மக்கள் என்­னிடம் கோரிக்கை முன்­வைத்­தனர். வேறு எந்த கோரிக்­கை­யி­னையும் என்­னிடம் முன்­வைக்­க­வில்லை. எனவே மக்­களின் கோரிக்­கை­யினை நான் நிறை­வு­செய்தேன். அதன் பின்­னரே நாட்டை அபி­வி­ருத்தி செய்யும் வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்தேன். ஆகவே 30 வரு­டங்கள் பின்­னோக்கிச் சென்ற வடக்கின் அபி­வி­ருத்­தியை முன்­னி­லைப்­ப­டுத்­தினோம்.

மேலும் நாட்­டி­லுள்ள தேசிய பிரச்­சினை தொடர்பில் எவ்­வ­கை­யான தீர்­வுக்கு வரு­வ­தா­யினும் அது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு, ஐக்­கிய தேசியக் கட்சி உட்­பட எதிர்க்­கட்­சி­யி­லுள்ள ஏனைய கட்­சி­க­ளுக்கும் அழைப்பு விடுத்தேன். எனினும் அவ்­ அழைப்­பினை அத்­த­ரப்­பினர் ஏற்­க­வில்லை. 

என்­னி­ட­மி­ருந்து கிடைக்கும் எந்­த­வொரு தீர்­வையும் ஏற்­றுக்­கொள்ள வேண்டாம் என சர்­வ­தே­சமும் புலம்­பெயர் தமிழ் அமைப்­பு­களும் கேட்­டுக்­கொண்­டி­ருந்­தன.

அதனாலேயே எனது அழைப்பை ஏற்க வில்லை. மேலும் என்னை தேர்தலில் தோற் கடிப்பதே சர்வதேசத்தினதும் புலம்பெயர் அமைப்புகளினதும் திட்டமாக இருந்தது. அதனாலேயே என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முன்வரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.