பபுவா நியூ­கி­னியின் மனுஸ் தீவி­லுள்ள அவுஸ்­தி­ரே­லி­யா வின் புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ ளர்­க­ளுக்­கான   தடுப்பு நிலை யம்  உத்­தி­யோ­க­பூர்­வ­மாக மூடப்­பட்­டுள்ள நிலையில் அந்த நிலை­யத்தை விட்டு வெளி­யேற மறுத்து வரும் புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்கள்  அருந்­து­வ­தற்கு நீர் இல்­லா­ததால்  நீரைப் பெறு­வ­தற்­காக  அந்த தடுப்பு நிலைய பகு­திக்குள் சுய­மாக  கிணறு தோண்டும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ள­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேற்­படி நிலையம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை  உத்­தி­யோ­க­பூர்­வ­மாக மூடப்­பட்­ட­தை­ய­டுத்து  அதற்­கான நீர் மற்றும் மின்­சார விநி­யோ­கங்கள்  நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் அந்த தடுப்பு நிலை­யத்தை விட்டு வெளியே வந்தால்  தாம் உள்­ளூர்­வா­சி­களால் தாக்­கப்­ப­டலாம் என்ற அச்சம்  கார­ண­மாக அந்த நிலை­யத்தில் சுமார் 600  பேர் தொடர்ந்து தங்­கி­யுள்­ளனர்.