புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரான பிர­சா­ரங்­களை எளிய அமைப்பின் ஊடாக விஸ்­த­ரிப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகளை முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத் தபாய ராஜபக் ஷ மேற்கொண்டுள்ளார்.

எதிர்­வரும் 19ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை கேகா­லை­யிலும், 26ஆம் திகதி அநு­ரா­த­பு­ரத்­திலும், டிசம்பர் 3ஆம் திகதி காலி­யிலும் பாரிய கூட்­டங்­களை நடத்­து­வ­தற்­கு­ரிய ஏற்­பா­டுகள் இடம்பெற்று வருகின்றன. 

இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, 

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டு­களை தேசிய அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரும் நிலையில் தற்­போது வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை வெளியி­டப்­பட்டு அது குறித்த விவா­தங்கள் பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெற்று வரு­கின்­றன. 

இந்­நி­லையில் குறித்த புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டுகள் மற்றும் வெளியா­கி­யுள்ள இடைக்­கால அறிக்கை, உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் ஆகி­யவை நாட் டுக்கு பாரிய ஆபத்து என்றும் குற்றம் சாட்டியுள்ள எளிய அமைப்பு அது தொடர்பில் பெரும்­பான்மை மக்­க­ளி­டத்தில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தும் பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வருகின்றது. முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை பிர­தா­னப்­ப­டுத்தி முத­லா­வ­தாக பிலி­யந்­த­லை­யிலும், இரண்­டா­வ­தாக கண்­டி­யிலும் இரு பாரிய கூட்­டங்­களை இந்த அமைப்பு நடத்­தி­யி­ருந்­தது. 

இந்­நி­லை­யி­லேயே இப்­பி­ர­சார நட­வ­டிக்­கையை மேலும் வலு­வாக்கி ஏனைய மாவட்­டங்கள் தோறும் முன்­னெ­டுப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தேர்­தல்கள் நெருங்­கு­வ­தனால் மக்கள் மத்­தியில் புதிய அர­சி­ய­ல­மைப்பை மையப்­ப­டுத்­திய கருத்­துக்­களை பிர­தா­னப்­ப­டுத்தி வாக்­கு­களை சேக­ரிக்கும் செயற்­பா­டு­களை அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் கட்­சிகள் முன்­னெ­டுக்கும் என்­பதால் இடைக்­கால அறிக்கை தொடர்­பான மாற்­றுக்­க­ருத்­துக்­களை மக்கள் மத்­தியில் கொண்டு செல்­வ­தற்குமான வகை­யி­லேயே இந்த நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

எவ்­வா­றா­யினும் தற்­போது நிகழ்­ச்சி நி­ர­லி­டப்­பட்­டுள்ள கேகாலை, அநு­ரா­த­புரம், காலி ஆகிய மூன்று கூட்­டங்­களும் வழ­மை­போன்று முன்னாள் பாது­காப்­புச்­செ­ய­லாளர் கோத்தபாயவின் பிரசன்னத்துடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை வியத்மய எனப்படும் தொழில் வாண்மையாளர்களின் அமைப் பும் மாவட்ட ரீதியாக தொழில் வாண்மை யாளர்களை ஒருங்கிணைத்து பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொள் வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வுள்ளதாகவும் அறியமுடிகின்றது.