கூட்டு எதி­ர­ணியில் செயற்­படும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தரப்பு  விசேட பேச்­சு­வார்த்தை ஒன்றை நடத்த தீர்­மா­னித்­துள்­ள­தாக கட்சி வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.  

நேற்று நடை­பெற்ற ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக்­கூட்­டத்தின் போது இந்த விடயம் குறித்து விரி­வாக  கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. மேலும் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­காக  கூட்டு எதி­ரணி முன்­வைத்­துள்ள   கோரிக்கை தொடர்பில் இணக்கம் எட்­டப்­ப­டாத நிலை­யி­லேயே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. 

தேசிய அர­சாங்­கத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செயற்­பா­டு­களை விமர்­சித்து தனித்து செயற்­படும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின்  42 உறுப்­பி­னர்கள் பொது எதி­ர­ணியில் இணைந்து செயற்­படும் நிலையில் அவர்­களை இணைத்­துக்­கொண்டு எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மற்றும் மாகா­ண­ச­பைகள் தேர்­தலில் கள­மி­றங்கும் நோக்­கத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். 

இந்­நி­லையில் பொது எதி­ர­ணியில் உள்ள   ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் சுதந்­திரக் கட்­சி­யுடன்  இணைந்து செயற்­ப­ட­வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய­லாளர் துமிந்த திசா­நா­யக கடிதம் மூலம்  அறி­வித்­தி­ருந்தார். அதன்­படி  அதற்கு பொது எதி­ர­ணி­யினர் பதில் கடிதம்  ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தனர். இதில் பிர­தா­ன­மாக எழு கார­ணி­களை உள்­ள­டக்­கி­யி­ருந்­தனர்.  

எனினும் பொது எதி­ர­ணியின் நிலைப்­பாடு குறித்தும் அவர்­களின் கோரிக்­கைகள் தொடர்­பிலும் நேற்று இடம்­பெற்ற  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­ட­னான கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக்­கூட்­டத்தின் போதும் இறு­தி­யான தீர்­மானம் ஒன்றும் எட்­டப்­ப­ட­வில்லை. 

அத்­துடன் நேற்­றைய கூட்­டத்தில் பொது எதி­ர­ணியில்   அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்கள் எவரும் கலந்­து­கொண்­டி­ருக்­க­வில்லை. இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் பொது எதி­ர­ணியின் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் விரைவில் பேச்­சு­வார்த்தை ஒன்­றினை முன்­னெ­டுத்து அதன் மூல­மாக உறு­தி­யான தீர்­மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தியை வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. 

மேலும் எதிர்­வரும் தேர்­தல்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து பொது சின்னத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடும் தீர்மானங்கள் எதுவும் நேற்றைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.