பௌத்தம் முத­லிடம் பெற்றால் சிங்­கள ஆதிக்­கமே நிலைக்கும்

Published By: Priyatharshan

04 Nov, 2017 | 12:19 PM
image

இலங்­கையில் பௌத்­தத்தை பின்­பற்­று­ப­வர்கள் சிங்­க­ள­வர்களே­யாவர். ஆகவே பௌத்­தத்­திற்கு  முத­லிடம் கோரு­ப­வர்கள்  சிங்­க­ள­வ­ருக்கு முத­லி­டத்தைக் கோரு­கின்­றனர்.   பௌத்தம் முத­லிடம்  பெற்றால் சிங்­கள ஆதிக்கம் நிலைக்கும். தமி­ழர்கள், முஸ்­லிம்கள் இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாக மாற்­றப்­பட்­டு­வி­டு­வார்கள். இதனால்  பௌத்­தத்­திற்­கான முன்­னு­ரி­மையை  ஏற்க முடி­யாது என்று வட­மா­காண  முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். 

உண்­மை­யான அதி­கா­ரப்­ப­கிர்வே தீர்­வாக அமையும்.  அவ்­வா­றான தீர்வு  சமஷ்டி அர­சியல் யாப்பு ஒன்றின் கீழேயே ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.   மதத்தைக் காரணம் காட்டி சிறு­பான்­மை­யி­னரை தமது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருப்­ப­தற்கு   முயற்சி இடம்­பெ­று­கின்­றது.  அதனை  ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­கா­ரப்­ப­கிர்வு  என்­பது தமிழ் மக்­களின் துய­ரங்­களை துடைக்க உத­வாது  என்றும்  முத­ல­மைச்சர்  சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

அதி­கா­ரப்­ப­கிர்வு   விட­யத்­தினை  உட­ன­டி­யாக  அர­சாங்கம் கைவி­ட­வேண்டும் என்று  முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­பக்ஷ  கோரி­யுள்­ளமை குறித்து கேள்வி எழுப்­பி­ய­போதே முத­ல­மைச்சர் இவ்­வாறு  கருத்து தெரி­வித்தார். 

இது குறித்து அவர் மேலும் கூறி­ய­தா­வது:-

 ஆங்­கி­லேயர் வெளி­யேறும் போது சிறு­பான்­மை­யி­னரை நீதி­யாக, நேர்­மை­யாக, சுய கௌர­வத்­துடன் அவர்கள் வாழ வழி வகுப்­பார்கள் என்று கரு­தியே சிங்­கள அர­சியல் தலை­வர்­க­ளிடம் பொறுப்பை ஒப்­ப­டைத்துச் சென்­றார்கள். வௌ்ளையர்கள் செல்லும் வரையில் நல்­ல­வர்கள் போல் நடித்து அதி­காரம் அவர்கள் கைக­ளுக்கு வந்­த­வுடன் சிங்­கள மக்கள் தலை­வர்கள் தமது சுய ரூபத்தை வெளிக்­காட்டி விட்­டார்கள். சோல்­பெரி பிரபு  சுதந்­திரம் அளித்து பத்துப் பன்­னி­ரண்டு வரு­டங்­க­ளுக்குப் பின்னர் டீ.ர்.ஃபார்மர் என்­ப­வ­ருக்கு எழு­திய கடி­தத்தில் சிங்­கள மக்­களின் தலை­வர்கள் இவ்­வாறு சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக நடப்­பார்கள் என்று அறிந்­தி­ருந்தால் ஒரு சம‘்டி அர­சையே தந்­து­விட்டுச் சென்­றி­ருக்­கலாம் என்று அங்­க­லாய்த்தார்.

எமது நாட்டின் இன முரண்­பாட்­டுக்­கான காரணம் சிங்­கள அர­சியல் வாதிகள் நாடு முழு­வ­தற்­கு­மான  அர­சியல் அதி­கா­ரங்­களைத் தம் வசம் ஆக்­கி­ர­மித்துக் கொண்­டதே. உதா­ர­ணத்­திற்கு வட கிழக்கில் தமிழ் மொழி காலாதி கால­மாகப் பேசப்­பட்டு வந்த போதும் 1956ஆம் ஆண்டில் சிங்­களம் மட்டும் சட்­ட­மா­னது வடக்­கையும் கிழக்­கையும் மற்­றைய ஏழு மாகா­ணங்­க­ளுடன் இணைத்து முழு நாட்­டுக்கும் ஒரே மொழி என்று சட்டம் இயற்­றி­யது. தமிழ் மக்கள் தலை­வர்கள் இதனை எதிர்க்கப் போக அவர்­க­ளுடன் உடன்­பா­டுகள் செய்து வட கிழக்கில் உள்­ள­வர்கள் பெற­வேண்­டிய உரித்­துக்­களைக் கைய­ளிப்­ப­தாகக் கூறி­விட்டு உடன்­ப­டிக்­கை­களைச் செல்லாக் காசாக்­கினர். இன்று இந்த நாட்டில் நிலவும் ஒரே­யொரு பிரச்­சினை பெரும்­பான்­மை­யினர் தாம் ஏதோ வழியில் ஆங்­கி­லே­ய­ரிடம் இருந்து பெற்றுக் கொண்ட அதி­கா­ரங்­களை மற்­றைய இனங்­க­ளுடன், குறிப்­பாகத் தமிழ்ப் பேசும் மக்­க­ளுடன் பகிர்ந்து கொள்ள மறுத்து வரு­வதே. எல்லாப் பெரும்­பான்­மை­யினக் கட்­சி­களின் சிங்­களத் தலை­வர்­களும் கட்சி பேத­மின்றி சிங்­களப் பெரும்­பான்­மை­யினர் பெற்றுக் கொண்ட அதி­காரம் வேறெ­வ­ரு­டனும் பகிர்ந்து கொள்­ளப்­ப­டாது என்­பதில் ஒரு­மித்த கருத்தைக் கொண்டே உள்­ளனர். 

விடு­த­லைப்­பு­லி­களின் கை ஓங்­கி­யி­ருந்த போது விட்டுக் கொடுக்க முன்­வந்­த­வர்கள் புலிகள் அழிந்­ததும் பழைய நிலைக்கே மாறி­விட்­டார்கள். எனவே ராஜ­பக்ஷ அவர்கள் புதி­தாக எதையும் கூற வர­வில்லை. பிரச்­ச­னைகள் வரும் போது அதி­காரப் பகிர்­வுகள் பற்றிப் பேசும் சிங்­கள அர­சியல் தலை­வர்கள் பிரச்­ச­னைகள் ஓர­ளவு தணிந்­ததும் பழைய நிலைக்கே சென்று விடு­கின்­றார்கள். அதி­காரப் பகிர்வு பற்றி எந்த வித மன­மாற்­றமும் அவர்­க­ளி­டையே ஏற்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வில்லை. 

அதி­காரப் பகிர்வு பற்றி ராஜ­பக்ஷ  கூறி­வ­ரு­கின்றார். அதா­வது அவர் குறிப்­பி­டு­வது ஒற்­றை­யாட்­சியின் கீழான அதி­கா­ரப்­ப­கிர்வே. கிட்­டத்­தட்ட 13வது திருத்­தச்­சட்­டத்தை ஒட்­டிய மீளாய்வு செய்­யப்­பட்ட அதி­காரப் பகிர்­வையே அவர் எதிர்க்­கின்றார். இவர்தான் போர் முடிந்­ததும் 13 பிளஸ்  என்று கூறி­யி­ருந்தார். இப்­பொ­ழுது அதி­கா­ரப்­ப­கிர்வு வேண்டாம் என்­கின்றார். இந்­தி­யாவில் சென்று இலங்­கையில் பௌத்தம் முத­லிடம் பெறா­விட்டால் பௌத்தம் அழிந்­து­விடும் என்ற விதத்தில் பேசி­யுள்ளார். அவர் கூறு­வது பௌத்தம் பற்­றி­யல்ல. சிங்­கள ஆதிக்கம் பற்­றியே என்­பதை நாம் உணர வேண்டும். இலங்­கையில் பௌத்­தத்தைப் பின்­பற்­று­ப­வர்கள் சிங்­க­ள­வரே. ஆகவே பௌத்­தத்­திற்கு முத­லிடம் கோரு­ப­வர்கள் சிங்­க­ள­வ­ருக்கே முத­லிடம் கோரு­கின்­றார்கள். அதா­வது பௌத்தம் முத­லிடம் பெற்றால் சிங்­கள ஆதிக்கம் நிலைக்கும். தமி­ழர்கள், முஸ்­லீம்கள் இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாக மாற்­றப்­பட்டு விடு­வார்கள் என்­பதே எதிர்­பார்ப்பு. இந்து, கிறிஸ்­தவத் தமி­ழரும், முஸ்­லீம்­களும் எக்­கா­லத்­திலும் பௌத்­தத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கு­வதை ஏற்­கக்­கூ­டாது. ஏற்றால் நாம் இரண்­டாந்­தரப் பிர­ஜைகள் ஆகி விடுவோம். பெரும்­பான்­மை­யினர் அர­சாளும் போது பெரும்­பான்­மை­யினர் மதத்­திற்கு முன்­னு­ரிமை கேட்­பது மதத்­திற்குப் பங்கம் வரும் என்­ப­தற்­காக அல்ல. மதத்தைக் காரணம் காட்டி சிறு­பான்­மை­யி­னரைத் தமது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்க வேண்டும் என்ற ஒரே கார­ணத்­திற்­கா­கத்தான்.

ராஜ­பக்ச கூறிய கருத்தைப் பற்றி என்­னு­டைய கருத்தைக் கேட்­டீர்­க­ளானால் நானும் ராஜ­பக்ச செப்­பு­வ­தையே கூறுவேன். அதா­வது ஒற்றை ஆட்­சியின் கீழான அதி­காரப் பகிர்வைக் கைவிட வேண்டும் என்று அவ­ரோடு சேர்ந்து கூறி விட்டு அதே மூச்சில் சமஷ்டி அர­சியல் யாப்பே எமக்கு அவ­சியம் என்பேன். ஒற்றை ஆட்­சியின் கீழான அதி­கா­ரப்­ப­கிர்வு தமிழ் மக்­களின் துய­ரங்­களைத் துடைக்க உத­வாது. மீண்டும் பெரும்­பான்­மை­யி­னரின் ஆதிக்­கத்தின் கீழ் நாம் கொண்­டு­வ­ரப்­பட்டு தொடர்ந்து போராட வேண்­டிய நிலையே ஏற்­படும். சுய கௌர­வத்­துடன் வாழத்­து­டிக்கும் எந்த ஒரு இனமும் இன்­னொரு இனத்தின் ஆதிக்கக் கெடு­பி­டி­க­ளுக்கு அடி­மைப்­பட்டு வாழ அனு­மதி தெரி­விக்க மாட்­டார்கள். ஒரே வித­மான மக்கட் கூட்­டங்கள் இடை­யேதான் ஜன­நா­யகம் பெரும்­பான்­மை­யி­னரின் கருத்தை ஏற்றுக் கொள்­கின்­றது. பல்­லின, பல்­மத, பன் மொழி மக்­களைப் பொறுத்த வரையில் யாவரும் சம உரித்துக் கொண்­ட­வர்கள் என்ற அடிப்­ப­டையில் அவர்கள் யாவ­ரதும் அடிப்­படை உரி­மை­களை வழங்­கிய பின்­னரே மற்­ற­வற்றைப் பற்றிச் சிந்­திக்­கின்­றது. 

தற்போதைய சிங்கள  அரசியல் தலைவர்கள் தமது குற்றமுள்ள நெஞ்சை ஆசுவாசப்படுத்த தமிழர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்து முன்மொழிவுகளை முன்வைக்கக் கூடும். அவர்கள் தருவதானது அவர்களால் தருவதாக அமையட்டும். எம்மைப் பொறுத்த வரையில் இந் நாட்டின் இனப் பிரச்சினை நிரந்தரமாகத் தீர வேண்டுமானால் 1949ஆம் ஆண்டிலிருந்து எமது அரசியல்த் தலைவர்கள் வலியுறுத்தி வரும் சமஷ்டி அரசியல் யாப்பே எமக்கு ஓரளவாவது நன்மை பயப்பதாய் அமையும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08