நல்­லாட்சி அர­சாங்கம் விரைவில் புதிய அர­சி­ய­ல­மைப்பை அமைக்கும் செயற்­பாட்டை முடி­வுக்கு கொண்­டு­வந்­து­விடும். ஒரு­போதும் அர­சாங்­கத்­தினால் இவ்­வா­றான எதிர்ப்­புக்­க­ளுக்கு மத்­தியில் இதனை செய்ய முடி­யாது. பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்தைக் கூட அர­சாங்­கத்­தினால் பெறமுடி­யாது என்று கூட்டு எதி­ர­ணியின்  தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான   தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.  

புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம்  தொடர்பில் அர­சாங்­கத்­துக்­குள்­ளேயே  எதிர்ப்­புகள் வெ ளிவர ஆரம்­பித்­து­விட்­டன. எனவே    அர­சாங்கம் விரைவில்   இந்த செயற்­பாட்டை முடித்­து­விடும் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

அதி­காரப் பகிர்வு  செயற்­பாட்டை நிறுத்­தி­வி­டு­மாறு முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்­ளமை  தொடர்பில்   விப­ரிக்­கை­யி­லேயே   கூட்டு எதி­ர­ணியின்  தலை­வரும் பாரா­ளு­மன்ற உறு­ப­பி­ன­ரு­மான   தினேஷ் குண­வர்த்­தன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர்  இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில் 

அர­சாங்­கத்­தினால்  புதிய  அர­சி­ய­ல­மைப்பு  செயற்­பாட்டை  தொடர்ந்து கொண்டு செல்ல முடி­யாது.    .மக்கள் எதிர்ப்பு தெரி­விக்க ஆரம்­பித்­து­விட்­டனர்.    அர­சாங்­கத்­துக்­குள்ளும் எதிர்ப்­புகள்   வலுத்­து­விட்­டன.  

எனவே  நல்­லாட்சி அர­சாங்கம் விரைவில் புதிய அர­சி­ய­ல­மைப்பை அமைக்கும் செயற்­பாட்டை முடி­வுக்கு கொண்­டு­வந்­து­விடும்.     ஒரு­போதும்  அர­சாங்­கத்­தினால்  இவ்­வா­றான எதிர்ப்­புக்­க­ளுக்கு  மத்­தியில் இதனை செய்ய முடி­யாது. பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்தை கூட அர­சாங்­கத்­தினால் பெற முடி­யாது.  எனவே சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு என்­பது  சாத்­தி­ய­மற்­ற­தா­கி­விடும்.  

எனவே  அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­க­ளுக்கு விரைவில் மூடு­விழா வரும்.   இது இவ்­வாறு நடக்கும் என்று  எங்­க­ளுக்கு தெரியும்.  எம்மை பொறுத்­த­வ­ரையில்  ஒற்­றை­யாட்­சிக்கு   மாறாக  எதற்கும் இட­ம­ளிக்­க­மாட்டோம். ஒற்­றை­யாட்சி முறையில் எந்த மாற்­றமும் செய்­யக்­கூ­டாது. 

அத்­துடன்    13 ஆவது திருத்தச் சட்­டத்தில் காணப்­ப­டு­கின்ற   ஒத்­தி­சைவு பட்­டி­ய­லிலும் அர­சாங்கம் கைவைக்­கக்­கூ­டாது. வடக்கு மக்­க­ளுக்கு  தற்­போது  13 ஆவது திருத்தச் சட்­டத்தில்  வழங்­கப்­பட்­டுள்ள   அதி­கா­ரங்கள் போது­மா­ன­வை­யாகும் என்றே நாங்கள் கரு­து­கின்றோம்.  அவர்கள்  அந்த அதி­கா­ரங்­களை வைத்­துக்­கொண்டே எதுவும் செய்­ய­வில்லை.  

அந்­த­வ­கையில்   தற்­போது அர­சாங்­கத்­தினால் எத­னையும் சாதிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.   வெ ளிநாட்டு முத­லீ­டுகள் அதிகரிக்கவில்லை.    பொருளாதாரம் வீழ்ச்சிகண்டு செல்கின்றது. எனவே இவ்வாறான  நெருக்கடிகளுக்கு  மததியில் அரசாங்கத்தினால்  புதிய அரசியலமைப்பையும்  கொண்டுவர  முடியாது. எனவே அரசாங்கம் விரைந்து     புதிய அரசியலமைப்புக்கான பணிகளை  முடித்துக்கொள்ளும் என்றார்.