புதிய அர­சி­ய­ல­மைப்பு பணிகள் பல­வீ­ன­ம­டை­யக்­கூ­டாது. பன்­மு­கத்­தன்­மையை ஏற்று சமத்­து­வ­மான புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என்­பதில் ஐரோப்­பிய ஒன்­றியப் பிர­தி­நி­தி­களும் உறு­தி­யா­க­வுள்­ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். 

ஜீன் லெம்பட் தலை­மை­யி­லான ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்றத் தூதுக்­கு­ழு­வி­ன­ருக்கும் எதிர்க்­கட்­சிக்­கட்­சித்­த­லை­வ­ருக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு நேற்று முன்­ன­தினம் பாரா­ளு­மன்­றத்தில் உள்ள எதிர்க்­கட்­சித்­த­லைவர் அலு­வ­ல­கத்தில் நடை­பெ­ற­வி­ருப்­ப­தாக நிகழ்ச்­சி­நி­ர­லி­டப்­பட்­டி­ருந்த போதும் அர­சி­ய­ல­மைப்பு சபை அமர்வு இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­மையால் அச்­சந்­திப்பு நடை­பெற்­றி­ருக்­க­வில்லை. 

இந்­நி­லையில் சாபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­யவின் இல்­லத்தில் நடை­பெற்ற இராப்­போ­சன விருந்­து­ப­சா­ர­மொன்றில் பங்­கேற்­ப­தற்­காக சென்­றி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் அங்கு வருகை தந்­தி­ருந்த ஜீன் லெம்பட் தலை­மை­யி­லான ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்றத் தூதுக்­கு­ழு­வி­ன­ருடன் சிறிது நேரம் கலந்­து­ரை­யா­டினார். 

உத்­தி­யோ­கப்­பற்­றற்ற முறையில் நடை­பெற்ற இந்தச் சந்­திப்­பின்­போதே ஐரோப்­பிய ஒன்­றியத் தூதுக்­கு­ழு­வினர் மேற்­கண்­ட­வா­றான கருத்­துக்­களை எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரி­டத்தில் குறிப்­பிட்­டுள்­ளனர். 

இச்­சந்­திப்பு தொடர்­பாக எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் மேலும் தெரி­விக்­கையில், 

தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான பணிகள் தொடர்­பா­கவும் தமி்ழ் மக்­களின் ஏனைய விட­யங்கள் தொடர்­பா­கவும் பல்­வேறு கருத்­துக்­களை ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்றத் தூதுக்­கு­ழு­விற்கு தலை­மை­தாங்­கி­யி­ருந்த ஜீன் லெம்பட் என்­னி­டத்தில் கேட்­டி­ருந்தார். 

குறிப்­பாக அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க விட­யத்தில் தற்­போது இடைக்­கால அறிக்கை மீதான விவாதம் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. இதில் பல கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. அனை­வ­ரி­னதும் ஒத்­து­ழைப்­புடன் இந்த விட­யத்­தினை முன்­னோக்கி கொண்டு செல்­ல­வேண்டும். தமிழ் மக்­க­ளுக்­கான சம­உ­ரிமை வழங்­கப்­பட வேண்டும். அப்­போது தான் இந்த நாட்டின் ஜன­நா­யகம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு நிலை­யான சமா­தான சூழல் உரு­வாகும். அபி­வி­ருத்தி ரீதி­யான மாற்­றங்கள் ஏற்­படும் என்­பதை தௌிவாக அவர்­க­ளி­டத்தில் குறிப்­பிட்டேன்.  அத்­துடன் தமிழ் மக்­களின் தீர்க்­கப்­ப­டாது கால­த­ம­தப்­ப­டுத்­தப்­பட்டு வரும் பிரச்­சி­னைகள் தொடர்­பா­கவும் நான் அவர்­களின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தி­ருந்தேன். 

இச்­ச­ம­யத்தில் அவ்­வி­ட­யங்கள் தொடர்­பாக நாமும் பல்­வேறு தரப்­பி­ன­ருடன் கலந்­து­ரை­யாடி அக்­க­ருத்­துக்­களின் அடிப்­ப­டையில் அரச தலை­வர்­க­ளுக்கு இவ்­வி­ட­யங்கள் தொடர்­பான அவ­சி­யத்­தினை வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாக தெரி­வித்தார். குறிப்­பாக அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டுகள் பல­வீ­ன­ம­டை­யாது பன்­மு­கத்­தன்ையை ஏற்று அனை­வரும் சம­மா­ன­வர்கள் என்ற சூழல் அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சியம் என்­ப­தையும் தாங்கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் அதற்கான தமது கரிசனையை தொடர்ந்தும் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்  சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் சர்வதேசம் தமிழர்களின் விடயத்தில் தொடர்ந்தும் கூடிய அக்கறை கொண்டிருக்கின்றது. சர்வசேம் தமிழர்கள் விடயத்தில் பலவீனமடையவில்லை. உறுதியானவொரு நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பது வௌிப்பட்டுள்ளது என்றார்.