(எம்.சி.நஜிமுதீன்)

நடிகை கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே அத்தீர்ப்பை கூட்டு எதிர்க்கட்சி ஏற்றுக்கொள்கிறது. எனினும் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுள்ள இன்னும் சிலர் பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்னறனர். 

அவர்களின் விபரங்களை விரைவில் வெளியிடவுள்ளோம்.ஆகவே அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதிதுவப்படுத்தும் நடிகை கீதாகுமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கமுடியாதென உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.