தம்புள்ளை வல்கம்வவ பிரதேசத்தை சேர்ந்த 5 வயது குழந்தையொன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த வேளையில், வீட்டின் பின் பகுதியில் இருக்கும் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து மரணித்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார்  தெரிவிக்கின்றனர். 

குறித்த குழந்தையின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பாரிய நோயொன்றின் தாக்கத்தினால் மரணித்துள்ள நிலையில், அக்குழந்தை இவ்வாறு பரிதாபகரமான வகையில் மரணித்துள்ளது.

வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என்று தேடிய வேளையிலேயே அக்குழந்தையின் சடலம் வீட்டின் பின்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

இது குறித்த மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.