இந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.

இந்தியக் கடற்படைக் கப்பல்களான திர் மற்றும் சுஜாதா என்பனவும், இந்திய கடலோர பாதுகாப்பு கப்பலான சாரதியும் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில், நல்லெண்ண மற்றும் பயிற்சிகள் பயணமாக இந்த போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.