தனக்கு தானே திரு­மணம் செய்து உல­களவில் பிர­ப­ல­மான  பெண் தற்­போது தன்னை  விவா­க­ரத்து செய்யப்போவ­தாக தெரி­வித்­துள்ளார். 

லண்­டனில் பிரிங்டன் என் னும் பகு­தியில் வசித்து வரும் சோபியா என்ற பெண்  கடந்த வருடம் அவரை அவரே திரு­மணம் செய்து கொண்டார். இதனால் உலகம் முழு­வதும் பிர­பலம் அடைந்தார். உலகில் உள்ள ஆண்கள், பெண்கள் யாரையும் தனக்கு பிடிக்­க­வில்லை என்றும் எனக்கு என்­னைத்தான் பிடித்­தி­ருக்­கி­றது என்றும்  அப்­போது கூறி­யி­ருந் தார். 

இதற்­காக நிஜ திரு­மணம் போல கோலா­க­ல­மாக அரங்கம் அமைத்து வெள்ளை நிற உடை அணிந்து தனக்குத்தானே மோதிரம் மாற்றிக்கொண்டார். இதன் மூலம் அவர் ஒரே நாளில் வைரலாகத் தொடங்­கினார். 

இதை­ய­டுத்து காதலில் விரு ப்பம் இல்­லாத பலர் இவரைப் பின்­பற்றி தனக்குத்தானே திரு­மணம் செய்யும் முடிவை எடுத்திருக்­கின்­றனர். 'சோலோ ­காமி' என்று அழைக்­கப்­படும் இந்த திரு­மண முறை தற்­போது அங்கு மிகவும் பிர­பலம் ஆகி­யி­ருக்­கி­றது. இந்த முறையின் மூலம் பெண்கள் மட்டும் இல்­லாமல் நிறைய ஆண்­களும் தனக்­குள்­ளேயே திரு­மணம் செய்துகொள்ள தொடங்கி இருக்­கி­றார்கள். இந்த திரு­மணம் நிஜ திரு­மணம் போல் நடந்­தாலும் இங்­கி­லாந்து நாட்டில் அதற்கு அங்­கீ­காரம் அளிக்­கப்­பட முடி­யாது என்று கூறப்­பட்டிருக்­கி­றது. 

இந்த நிலையில் சோபியா என்ற அந்த பெண்­மணி தற்­போது''தனக்கு தன்­னுடன் வாழ்­வது மிகவும் கடி­ன­மாக இருப்­ப­தா­கவும், அடிக்­கடி தனக்குள் சண்டை போட்டுக் கொள்­வ­தா­கவும் கூறி­யி­ருக்­கிறார். மேலும் இப்­ப­டியே சண்டை போட்டால் தன்னை தானே வெறுத்­து­வி­டுவேன்'' என்­பதால் தன்னை விவா­க­ரத்து செய்­யப்­போ­வ­தாக அறி­வித்­துள்ளார்.  அவரின் இந்த அறி­விப்பால் அவர் மீண்டும் பிர­பலம் ஆகி­யி­ருக்­கிறார். 

இந்­நி­லையில் அவர் இந்த விவா­க­ரத்­துக்கு தற்­போது புதி­ய­தொரு காரணம் ஒன்றும் கூறி­யி­ருக்­கிறார். அதன்­படி அவர் 'ரவுரி பாராட் ' என்ற இன்­னொரு ஆணுடன் காதலில் இருப்­ப­தாக கூறி­யுள்ளார். மேலும் இன் னும் சில மாதங்­களில் அந்த ஆணை திரு­மணம் செய்­து­கொள்ளப்போவ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். மேலும் அந்த ரவுரி பாராட் என்­ப­வரும் சில வரு­டங்­க­ளுக்கு முன்பு தனக்­குள்­ளேயே காத­லித்து திரு­மணம் செய்து கொண்­டவர் ஆவார். இவர்கள் இருவரும் தனக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டது அதிகாரபூர்வமாக செல்லாது என்பதால் இவர்களால் விவா கரத்தும் பெற முடியாது என தெரிவிக்கப்படுகிறது.