கடும் அதி­ருப்­தியை வெளியிட்­டது ஐரோப்­பிய ஒன்­றிய தூதுக்­குழு

Published By: Robert

03 Nov, 2017 | 10:37 AM
image

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­வ­தாக கடந்த வருடம் நாங்கள் இலங்­கைக்கு வந்­த­போது பிர­தமர் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் உறு­தி­ய­ளித்­தனர். ஆனால் இவ்­வ­ருடம் இலங்கை வரும் போதும் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் இன்னும் நீக்­கப்­ப­டாமை தொடர்பில் ஐரோப்­பிய ஒன்­றியம் கடும் அதி­ருப்­தியை வெளி­யி­டு­கின்­றது என்று இலங்­கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் மதிப்­பீடு செய்ய வருகை தந்த ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்ற தூதுக்­கு­ழுவின் தலைவி ஜீன் லெம்பட் தெரி­வித்தார். 

இதே­வேளை நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் பாரிய  தாமதம் நில­வு­கி­றது. பொறுப்­புக்­கூ­றலில் இது­வரை எந்த அடை­வு­மட்­டமும் இல்லை. இதனால் அர­சாங்­கத்­திற்கு நம்­பிக்­கை­யுடன் வாக்­க­ளித்த மக்­களின் நம்­பிக்கை இன்று படிப்­ப­டி­யாக குறை­வ­டைந்து செல்­வதை அவ­தா­னிக்­கின்றோம். அர­சாங்கம் அந்த நம்­பிக்­கையை இழந்­தி­ருக்­கின்­றது எனவும் இலங்­கைக்கு வருகை தந்த ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்ற தூதுக்­கு­ழுவின் தலைவி ஜீன் லெம்பட் சுட்­டிக்­காட்­டினார். 

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லுகை இலங்­கைக்கு வழங்கப்­பட்­டதன் பின்னர் 27 சர்­வ­தேச சாச­னங்­களை இலங்கை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது தொடர்பில் மதிப்­பீடு செய்­வ­தற்கு இலங்­கைக்கு வருகை தந்த ஜீன் லெம்பட் தலை­மை­யி­லான ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்றத் தூதுக்­கு­ழு­வினர் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே இந்த விட­யங்கள் வெளி­யி­டப்­பட்­டன. ஐரோப்­பிய பாரா­ளு­மன்றத் தூதுக்­கு­ழுவின் தலைவி ஜின் லெம்பட் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

யாழில் சிவில் சமூ­கத்­துடன் சந்­திப்பு

எமது  குழு யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம்  செய்து அங்கு வட­மா­காண ஆளு­ந­ரையும் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தது. அத்­துடன் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஆத­ர­வுடன் இடம்­பெறும் மீள்­கு­டி­யேற்ற செயற்­பா­டு­க­ளையும் பார்­வை­யிட்டோம். கொழும்பில் நிதி அமைச்சர் சர்­வ­தேச வர்த்­தக அமைச்சர், வெளி­வி­வ­கார அமைச்சின் அதி­கா­ரிகள், சுற்­றாடல் அமைச்சர், தொழில் உற­வுகள் அமைச்சர், தேசிய நல்­லி­ணக்க அமைச்சின் அதி­கா­ரிகள் உள்­ளிட்ட பலரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினோம். நாளைய தினம் (இன்­றைய தினம்) எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­தனை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­த­வி­ருக்­கின்றோம்.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை

நாங்கள் கடந்த முறை இலங்­கைக்கு வந்­ததன் பின்னர் இலங்­கையில் சில முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன என்­பதை வர­வேற்­கின்றோம். இலங்­கைக்கு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜி.எஸ்.பி. வரிச்­ச­லுகை  கிடைத்­தி­ருக்­கின்­றது. அத்­துடன் மீன் ஏற்­று­மதி தடையும் நீக்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் இலங்­கைக்கு புதிய வரு­மான மூலங்கள் கிடைப்­ப­துடன் தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்க முடியும். எவ்­வா­றெ­னினும் இலங்­கையின் மறு­சீ­ர­மைப்பு செயற்­பா­டு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே இலங்­கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லுகை வழங்­கப்­பட்­டது. இலங்கை எவ்­வாறு 27 சர்­வ­தேச சாச­னங்­களை மதிக்­கி­றது என்­பதை பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம்.

கடும் தாம­தத்தை அவ­தா­னித்தோம்

மிக முக்­கி­ய­மாக இங்கு வருகை தந்த  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான நாட்டின் நிலை­மை­யி­லான முன்­னேற்­றங்கள் மிகவும் தாம­த­மான மந்­த­க­தியில் இடம்­பெ­று­வதைக் கண்டு எமது கவ­லையை வெளி­யி­டு­கின்றோம். எதிர்­பார்த்­த­தை­விட மிகவும் தாம­த­மாக முன்­னேற்றம் காணப்­ப­டு­கின்­றது. எனினும் முன்­னேற்­றத்­திற்­கான அத்­தி­வா­ரங்கள் சரி­யான இடங்­களில் இடப்­பட்­டுள்­ளதை காண்­கின்றோம். அர­சி­ய­ல­மைப்பு  மறு­சீ­ர­மைப்பு செயற்­பாட்டை பலப்­ப­டுத்­து­மாறும் மனித உரி­மையை பாது­காக்­கு­மாறும் ஜன­நா­ய­கத்­தையும் சட்­டத்தின் ஆட்­சிப்­ப­டுத்­த­லையும்  உறு­திப்­ப­டுத்­து­மாறும் தேசிய நல்­லி­ணக்­கத்தை வலு­வாக முன்­னெ­டுக்­கு­மாறும் நாம் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றோம். 

 பல விட­யங்கள் செய்­யப்­ப­ட­வில்லை  

இங்கு முக்­கி­ய­மான சில விட­யங்கள் இன்னும் நிலு­வை­யி­லேயே இருப்­பதை காண்­கின்றோம். குறிப்­பாக நாம் கடந்த முறை இலங்­கைக்கு வந்­த­போது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கி அதற்குப் பதி­லாக சர்­வ­தேச தரத்­தையு­டைய புதிய  சட்டம் ஒன்றை கொண்­டு­வ­ரு­வ­தாக பிர­தமர்  தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் சிரேஷ்ட தலை­வர்கள் எமக்கு தனிப்­பட்ட ரீதியில் உறு­தி­ய­ளித்­தனர். 

கடும் அதி­ருப்தி 

ஆனால் அந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டாமை குறித்து அதி­ருப்தி அடை­கின்றோம். அதா­வது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை இது­வரை நீக்­காமல் இருக்­கின்­றமை தொடர்பில் நாங்கள் அதி­ருப்­தியும் கவ­லையும் கொள்­கின்றோம். தற்­போது இந்த சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்கும் செயற்­பாடு இல்­லா­வி­டினும் இந்த சட்­டத்தின் கீழ் முன்னர் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் இன்னும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். பலர் நீதி­மன்­றத்­தையே காணாமல் குற்­றப்­பத்­தி­ரிகை முன்­வைக்­கப்­ப­டாமல் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். பலர் பல­வ­ரு­டங்­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளதை காண­மு­டி­கின்­றது.

காணி விடு­விப்பில் தாமதம்

இதே­வேளை வடக்கில் காணிகளை விடு­விக்கும் செயற்­பா­டுகள் மிகவும் எதிர்­பார்த்­த­தை­விட மந்த கதியில் தாம­த­மாக  இடம்­பெ­று­வதை அவ­தா­னிக்­கின்றோம். காணிகள்  விடு­விக்­கப்­ப­ட­வில்­லை­யென்­ப­துடன் அவற்­றுக்­கான நட்­ட­ஈ­டு­களும் வழங்­கப்­ப­ட­வில்லை என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டு­கின்றோம். இந்த விட­யத்தில் ஐரோப்­பிய ஒன்­றியப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கவ­லை­ய­டைந்­தி­ருக்­கின்­றனர். காணா­மல்­போனோர்  அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதை வர­வேற்­கின்றோம்.

பொறுப்­புக்­கூறல் இல்லை  

ஆனால் தேசிய நல்­லி­ணக்க செயற்­பாட்­டிலும் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­யிலும்  எந்­த­வி­த­மான முன்­னேற்­றமும் அடை­யப்­ப­ட­வில்லை என்­பது தொடர்பில் எமது கவ­லையை வெளிப்­ப­டுத்­து­கின்றோம். அர­சாங்கம் வாக்­கு­றுதி அளித்­த­வாறு இந்த வெற்­றியை அடை­வ­தற்­கான முயற்­சி­களை  மேற்­கொள்­ள­வேண்­டு­மென ஊக்­கு­விக்­கின்றோம். எனினும் ஐரோப்­பிய ஒன்­றியம் தொடர்ந்தும் இலங்­கை­யுடன் உறவைப் பலப்­ப­டுத்­த­வேண்டும் என்றும் ஈடு­பாட்­டுடன் செயற்­ப­ட­வேண்டும் என்றும் பரிந்­துரை செய்­கின்றோம். 

 மக்கள் நம்­பிக்­கை­யி­ழப்பு 

அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு செயற்­பாட்டில் அர­சாங்­கத்தின் முன்­னேற்­றத்தை காண்­கின்றோம். மேலும் இந்த விட­யத்தில்  முன்­னேற்றம் ஏற்­படும் என எதிர்­பார்க்­கின்றோம். சர்­வ­தேச சாச­னங்கள் விட­யத்­திலும் தாமதம் நில­வு­வதை காண்­கின்றோம். இந்த நிலைமை மாற­வேண்டும். குறிப்­பாக மாற்­றங்கள் மிகவும் தாம­த­மாக இடம்­பெ­று­வதை அவ­தா­னிக்­கின்றோம். இது மக்­களின் அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கையை இழக்க செய்­தி­ருக்­கின்­றது. அர­சாங்கம் அந்த நம்­பிக்­கையை இழந்­தி­ருக்­கின்­றது. 

கேள்வி: ஜி.எஸ்.பி.பிளஸ் வழங்­கப்­பட்ட பின்னர்  நிலை­மையில் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளதா?

பதில்: பாரிய முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ள­தாக கூற முடி­யாது. ஆனால் ஒரு­சில ஆரோக்­கி­ய­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் அடுத்­த­வ­ருடம் ஜன­வரி மாதம் இலங்கை எவ்­வாறு இந்த சர்­வ­தேச சாச­னங்­களில் செயற்­ப­டு­கி­றது என்­பது தொடர்பில் ஐரோப்­பிய ஒன்­றியம் அறிக்­கை­யொன்றை வெளி­யி­ட­வி­ருக்­கி­றது. அந்த அறிக்­கையில் என்ன கூறப்­ப­டப்­போ­கின்­றது என்­பதை பார்க்­கின்றோம். நாங்கள் இலங்­கையின் அதி­கா­ரி­களை சந்­தித்­த­போது அவர் பல செயற்­பாட்டுத் திட்­டங்­களை எமக்கு காட்­டினர். 

கேள்வி: எந்த விட­யத்தில் அதி­ருப்தி காண்­கின்­றீர்கள்?

பதில்: ஒரு­வ­ரு­டத்­திற்கு முன்பு வாக்­கு­று­தி­ய­ளித்த சில விட­யங்கள் இடம்­பெ­ற­வில்லை. இது கவ­லையை ஏற்­ப­டுத்­து­கி­றது.  நாங்கள் இது தொடர்பில் தொடர்ந்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­துவோம். இந்த விட­யங்­களில் முன்­னேற்றம் ஏற்­படும் என எதிர்­பார்க்­கின்றோம். 

கேள்வி: பயங்­க­ர­வாத தடைச்­சட்ட விவ­காரம்  குறித்து?

பதில்: இது தொடர்பில் கவலை அடை­கின்றோம். அர­சாங்கம் ஐக்­கி­ய­ நா­டுகள் மனித  உரிமை பேர­வைக்கும் பல வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருக்­கி­றது. அதன்­படி அர்ப்­ப­ணிப்­புடன் அர­சாங்கம் செயற்­படும் என நம்­பு­கிறோம். சிவில் மற்றும் அர­சியல் உரிமை உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.  இலங்கை அர­சாங்கம் ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை பேர­வை­யுடன் ஈடு­பாட்­டுடன் செயற்­ப­டு­கின்­றது. அவை ஒரு பக்­கத்தில் நடை­பெறும். எமது ஈடு­பாடும் தொடரும்.

கேள்வி: பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்க 2019 ஆம் ஆண்­டு­வரை கால அவ­காசம் வழங்­கப்­போ­கின்­றீர்­களா?

பதில்: பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்க அவ்­வ­ளவு காலம் வழங்­கு­வதா? அர­சாங்கம் இதனை விரைவில் நீக்கி புதிய சட்­ட­மூ­லத்தை சர்­வ­தேச தரங்­க­ளுக்கு அமைய கொண்­டு­வரும் என எதிர்­பார்க்­கின்றோம். ஏனைய நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளுக்­கான நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் எம்மைப் பொறுத்­த­வ­ரையில்  பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் விரை­வாக நீக்­கப்­ப­ட­வேண்டும். 

கேள்வி: பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­ப­டா­விடின் என்ன செய்­வீர்கள்?

பதில்: அர­சாங்கம் அதனை நீக்கும் என நம்­பு­கின்றோம். இலங்கை மக்கள் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையின் நன்­மையைப் பெற­வேண்­டு­மென்­பதே எமது விருப்பம். நாம் நிலை­மையை பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். அது­மட்­டு­மன்றி ஜன­வரி மாதம் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் அறிக்கை வெளி­வ­ர­வி­ருக்­கின்­றது. 

கேள்வி: காணி விடு­விப்பு தொடர்பில் ?

பதில்: இந்த விட­யத்தில் ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்­றக்­குழு கவ­லை­ய­டைந்­தி­ருக்­கின்­றது. காணி விடு­விப்பு கடும் தாம­தத்தை அடைந்­தி­ருக்­கின்­றது. அது­மட்­டு­மன்றி நட்­ட­ஈடும் வழங்கப்படாமல் இருக்கின்றது. 

கேள்வி: இலங்கை வந்த ஐ.நா. நிபுணர் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் இல்லை என அதிருப்தி வெளியிட்டிருந்தார். அது தொடர்பில் உங்கள் பார்வை எவ்வாறு இருந்தது?

பதில்: ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்­கைக்கு நேர அட்­ட­வ­ணை­யுடன் கால அவ­கா­சத்தை வழங்­கி­யி­ருக்­கி­றது. அதற்­கேற்­ற­வ­கையில் அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுக்கும் என நம்­பு­கிறோம். ஆனால் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தையே நாம் காண்­கின்றோம். நல்­லி­ணக்க படி­மு­றை­களில்  சில நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் பொறுப்­புக்­கூ­றலில் எந்த நட­வ­டிக்­கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது தெரிகிறது. 

கேள்வி:2016 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எவ்வாறு உறுதியை அரசாங்கம் அளித்தது?

பதில்: பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கி புதிய சட்­ட­மூ­லத்தை சர்­வ­தேச தரத்­துடன் கொண்­டு­வ­ரு­வ­தாக உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது. ஆனால் இது­வரை நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. சர்­வ­தேச  தரத்­துடன் புதிய சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­பட்டு தற்­போது நடை­மு­றையில் இருக்­கின்ற பயங்­க­ர­வாத தடைச்சட்டம் நீக்கப்படும் என நம்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58