பிரச்­சினையை தீர்க்க முடிந்­தி­ருந்தும் மஹிந்த ராஜ­பக் ஷ அதனை ‍செய்யத் தவ­றி­யி­ருந்தார்.  எனவே தேசிய பிரச்­சி­னைக்கு அவர் தீர்வு வழங்­கி­யி­ருந்தால் இன்றும் அவர் ஜனா­தி­ப­தி­யாக இருந்­தி­ருப்பார். புலம்­பெ­யர்ந்­த­ தமி­ழர்கள் முத­லீ­டுகள் செய்ய தயா­ராக இருக்­கின்­றனர். எனினும் ஊக்­கு­விப்பு கிடை­யாது என கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வி.இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார்.

அர­சி­ய­ல­மைப்பு சபையில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடைக்­கால அறிக்கை மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தனது உரை­யில்,

அர­சி­ய­ல­மைப்பில் மாற்றம் ஏற்­பட்­டாலும் தற்­போ­து புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை என்­ப­தை உணர்ந்து இடைக்­கால அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டில் நடை­பெற்ற யுத்­த­த்தினால் மலை­யக மக்­களே அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டனர். அவர்கள் அர­சியல் அநா­தை­க­ளாக்­கப்­பட்­டனர். ஏனெனில் எமது பிர­ஜா­வு­ரிமை பறிக்­கப்­பட்­டது. அதன்­பின்னர் சிறிமா- – சாஸ்­திரி ஒப்­பந்­தத்தின் ஊடாக மலை­யக மக்கள் பல­வந்­த­மாக இந்­தி­யா­வுக்கு அனுப்பப்பட்­டனர். 

நாம் முன்னாள் ஜனா­தி­பதி பிரே­ம­தா­ஸ­விற்கு நன்றி கூற வேண்டும். அவர்தான் எம்­ம­வர்­க­ளுக்கு பிர­ஜா­வு­ரிமை வழங்­கினார். மலை­யக மக்கள் யுத்­தத்தினால் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டனர். தற்­போது வடக்கு, கிழக்கில் வாழும் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்கு முயற்சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. எனவே மீண்டும் யுத்தம் வராமல் பாது­காக்க வேண்டும். இதன்­படி இனங்கள் ஒற்­றுமையாக இருக்க வேண்டும். மதங்கள் மதிக்­கப்பட வேண்டும். இதற்கு சிங்­கப்பூர் உதா­ர­ண­மாகும். இலங்­கையில் மத ங்­க­ளையும் மொழிகளை யும் மதிக்கும் சூழல் வேண்டும். 

அர­சி­ய­ல­மைப்பின் நிதி தொடர்­பான உப குழுவில் நானும் இருந்தேன். பந்­துல குண­வர்­தன அதன்  தலை­வ­ராக இருந்தார். இதனை அடிப்­ப­டை­யாக கொண்டு அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிக்­கவே ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. நாட்டில் பொரு­ளா­தாரம் முன்­னேற்றம் கண்டு வந்­தாலும் சிக்­கல்கள் உள்­ளன. இந்த பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமைதி கொண்டுவரப்­பட வேண்டும். தற்­போது ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்­கட்சி தலைவர் ஆகிய மூன்று தலை­வர்­களும் இணைந்து அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க முன்­னிலை வகிக்­கின்­றனர். எனவே இன்று விட்டால் நாளை செய்ய முடி­யாது.

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்­திக்கு முன்­னின்று செயற்­பட்டார். எனினும் அவர் அப்­ப­கு­தி­களில் வாழும் மக்­களின் மனங்­களில் உள்ள பிரச்­சினைகளை இனங்­கா­ண­வில்லை. ஆனால் இந்த பிரச்­சினை தீர்க்க முடிந்­தி­ருந்தும் மஹிந்த ராஜ­பக் ஷ அதனை ‍செய்ய தவ­றி­யி­ருந்தார்.  எனவே தேசிய பிரச்­சி­னைக்கு அவர் தீர்வு வழங்­கி­யி­ருந்தால் இன்றும் மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்­தி­ருப்பார். 

எனவே சிங்­கள மக்­களின் ஆத­ர­வுடன் அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்ற வேண்டும். அத்­துடன் தற்­போது தம்­மின மோதல்கள் அதி­க­மாகும். மலை­யக தமி­ழர்கள் மோது­கின்­றனர். வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்குள் பிரச்­சினை. முஸ்­லிம்­க­ளுக்குள் பிரச்­சி­னைகள் உள்­ளன. இது மாற வேண்டும். ஐக்­கி­யத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். இலங்கை மீது இன்னும் புலம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்கு நம்­பிக்கை வர­வில்லை. வெளி­நா­டு­க­ளுக்கு சென்றால் எப்­போது தமி­ழீழம் உரு­வாகும் என கோரு­கின்­றனர். அத்­துடன் வெளி­நா­டு­களிலிருந்து வரும் முதலீட்டாளர்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் இடையூறாக உள்ளன. 

நாட்டில் முதலீட்டாளர்களை ஊக்குவிப் பாளர்கள் இல்லை. புலம்பெயர்ந்தவர்கள் தமிழர்கள் முதலீடுகள் செய்ய தயாராக இருக்கின்றனர். எனினும் ஊக்குவிப்பு கிடை யாது. இதுபெரும் பிரச்சினையாகும். இனப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். இதற்கு சிங்களவர்களின் ஆதரவு அவசியமாகும்.