இலங்­கையில் பெளத்த மதத்­திற்கே முன்­னு­ரிமை வழங்­கப்­படும். இலங்­கையின் வர­லாற்றை  ஒரு­போதும் மாற்­றி­ய­மைக்க முடி­யாது என  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய இரு­வரும் சர்­வ­தேச பெளத்த மாநாட்டில் வலி­யு­றுத்­தினர். 

பௌத்­தத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வ­துடன் ஏனைய மதங்­க­ளுக்கும் சம உரி­மை­களை வழங்க பின்­னிற்­கப்­போ­வ­தில்லை எனவும் அவர்கள்  தெரி­வித்­தனர். 

ஏழா­வது சர்­வ­தேச பெளத்த மாநாடு நேற்று அல­ரி­மா­ளி­கையில் இடம்­பெற்­றது.  அஸ்­கி­ரிய மல்­வத்து மாநா­யக தேரர்­களின் தலை­மையில்  47 நாடு­களின்  பெளத்த மதத் தலை­வர்கள் மற்றும் சமய அமைப்­பு­களின் உறுப்­பி­னர்கள் கலந்­து­கொண்ட இந்த பெளத்த மாநாட்டில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர்.  

 மாநாட்டில் உரை நிகழ்த்­திய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  குறிப்­பி­டு­கையில்  

சர்­வ­தேச பெளத்த மாநாட்­டினை இலங்­கையில் நடத்­து­வது குறித்து நாம் மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம். பெளத்த கொள்­கையில் ஐக்­கிய நாடாக நாம் வாழ்ந்து வரு­கின்றோம். பெளத்த பின்­ன­ணி­யினை கொண்ட, பெளத்த கலா­சா­ரத்தை கொண்ட நீண்­ட­கால பெளத்த அடை­யாளம் கொண்ட நாடாக  இலங்கை   விளங்­கி­வ­ரு­கின்­றது. இன்று உலகில் பல்­வேறு குழப்­பங்கள், யுத்­தங்கள், முரண்­பா­டுகள் எழுந்­துள்­ளன என்றால் உலகில் அறம் சாராத கொள்­கையே கார­ண­மாகும். உலகம் தொழி­நுட்­பத்தில், நாக­ரி­கத்தில் மாத்­திரம் வளந்­துள்ள போதிலும் அவை தொடர்பில் பேசப்­பட்டு வரு­கின்ற போதிலும்  மதம், அறம் என்­பதில் அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­ட­வேண்டும். இவை பெளத்த தர்­மத்தில் கூறப்­பட்­டுள்­ளன. இயற்கை சீற்றம், மாறு­பட்ட கால­நிலை, சமூக அழி­வுகள் என்­ப­வற்றை அன்றே புத்தர் முன்­வைத்­துள்ளார். உலகின் பல்­வேறு பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு பௌத்­தத்தில் தீர்வு உள்­ளது. 

இந்து, முஸ்லிம், கிறிஸ்­தவம் ஆகிய மதங்­க­ளிலும் இந்த சமூக நோக்கு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே இந்த பெளத்த மாநாட்டின் மூல­மாக நாம் இவற்­றினை உல­குக்கு வெளிப்­ப­டுத்த வாய்ப்பு கிடைத்­துள்­ளதை எண்ணி நாம் பெருமை கொள்­கின்றோம். இந்த நாட்டில் சகல மதங்­களும் இணைந்து சம­மாக வாழக்­கூ­டிய ஒரு சூழல் உரு­வாக்­கப்­பட  வேண்டும். அதேபோல் பௌத்தம் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு அதற்­க­மைய நாடு இயங்க வேண்டும் என்­பதில் நாம் உறு­தி­யாக உள்ளோம்.  மிக நீண்­ட­கால யுத்­தத்தை எதிர்­கொண்ட நாடு என்ற வகையில் எமது நாட்டில் சமூக இன ஒற்­று­மை­யினை பலப்­ப­டுத்தி, ஒரு இணைந்த சமூ­க­மாக முன்­னோக்கி செல்ல, எதிர்­கால சந்­த­தி­யினர் அமை­தி­யாக வாழ­வேண்­டிய வகையில் பெளத்த கொள்­கைக்கு அமைய நாம் செயற்­பட வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மாநாட்டில் உரை நிகழ்த்­து­கையில், 

இவ்­வா­றா­ன­தொரு சர்­வ­தேச பெளத்த மாநாடு இலங்­கையில் நடத்­தப்­ப­டு­வதும் இந்த மாநாட்டில் கலந்­து­கொள்ளும் வகையில் 47 நாடு­களின் பெளத்த மத தலை­வர்கள் மற்றும் துற­விகள் எமது மாநா­யக்க தேரர்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வதும்  மிகவும் மகிழ்ச்­சி­க­ர­மான விட­ய­மாக நான் கரு­து­கின்றேன். உலகில் பௌத்தம் சமா­தா­னத்தை உறு­திப்­ப­டுத்தும் சம­ய­மாகும். இதில் நாம் எவ்­வாறு அறத்தை பின்­பற்ற வேண்டும், சமூ­கத்தில் எம்­மா­லான சேவைகள், ஒரு பெளத்தன் எவ்­வாறு நெறிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதை பௌத்தம் எமக்குக் கற்­றுத்­த­ரு­கின்­றது. 

இன்று உலக நாடு­களில் பௌத்தம் அனை­வ­ராலும் ஏற்­று­கொள்­ளப்­பட்டு போற்­றப்­படும் ஒரு மத­மாக மாற்றம்   கண்­டுள்­ளது என்றால் அதற்கு  பெளத்­தத்தில் கூறப்­பட்­டுள்ள அற­நெறி கொள்­கையே கார­ண­மாகும். இலங்­கையில் பௌத்தம் மிக நீண்­ட­கால வர­லாற்­றினை கொண்­டுள்­ளது. அசோகா சக்­க­ர­வர்த்தி மூல­மாக இலங்­கையில் பௌத்தம் உருப்­பெற்­றதை அடுத்து மிக நீண்­ட­கால வர­லாறு ஒன்றை தோற்­று­வித்­துள்­ளது. அன்றில் இருந்து பௌத்தம் இலங்­கையின் பிர­தான மத­மாக அடை­யா­ள­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதில் மாற்றம் இல்லை. எப்­போதும் பெளத்த மதத்­திற்கே முன்­னு­ரிமை வழங்­கப்­படும். அதே நிலையில் இலங்­கையில் உள்ள ஏனைய சிறு­பான்மை மக்­களின் மதங்­க­ளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்தும் அதை நாம் பேணிப் பாதுகாப்போம். இந்த நாட்டில் பௌத்தம் பிரதான மதமாக உள்ள அதே நிலையில் ஏனைய மதங்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும்.  நாட்டின் சமாதானாம் அமைதியும் அதிலேயே தங்கியுள்ளது. அமைதியாக மக்கள் வாழக்கூடிய வகையில் பெளத்த மத கொள்கைகளை நாட்டில் மேலும் பலப்படுத்தி சமாதானத்தை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டர்.